என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க மத்திய மந்திரிக்கு ரங்கசாமி கடிதம்

    இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க மத்திய மந்திரிக்கு ரங்கசாமி கடிதம் எழுதி உள்ளார்.
    புதுச்சேரி:

    காரைக்கால் கோட்டுச்சேரி மேட்டுத்தெருவை சேர்ந்த வீரமணி, செல்வமணி, திலீபன், ரமேஷ் மற்றும் சுரேஷ் ஆகிய 5 மீனவர்களும், தமிழகத்திலுள்ள நாகை தரங்கம்பாடியைச் சேர்ந்த 8 மீனவர்களும் 23-ந் தேதி கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். 

    அப்போது இலங்கை  கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்களது படகு பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து காரைக்கால் மீனவர்களின் குடும்பத்தினர் முதல்- அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மீட்க கோரினர்.இந்த நிலையில் அமைச்சர் லட்சுமிநாராயணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில் புதுவை மற்றும் தமிழகத்தை சேர்ந்த 13 மீனவர்களையும், அவர்களின் படகையும் இலங்கையில் இருந்து மீட்க வேண்டும் 

    மீனவர் நலன் கருதி அதிமுக்கியத்துவம் தந்து இலங்கை அரசிடம் பேசி வலியுறுத்தி அனைவரையும் உடனே விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கடிதத்தில் கூறியுள்ளார்.

    இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×