என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தவளக்குப்பம் வேளாண் அறிவியல் கல்லூரியில் பெண் விவசாயிகளை கவுரவிக்கும் விழா நடந்தது.
    புதுச்சேரி:

     புதுவை  தவளக்குப்பத்தில் உள்ள பாண்டிச்சேரி வேளாண் அறிவியல் கல்லூரியில் உலக பெண்கள்   தினத்தை முன்னிட்டு பெண் விவசாயிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

    விழாவிற்கு பூரணாங்குப்பம் இந்தியன் வங்கியின் கிளை மேலாளர் ஜெயதுர்கா  தலைமை தாங்கினார். கல்லூரியின் தாளாளர் அக்ரி கணேஷ் முன்னிலை வகித்தார். 

    கல்லூரியின் உதவி பேராசிரியர் மணிகண்டன் வரவேற்புரையாற்றினார். விழாவில் தவளக்குப்பம், நல்லவாடு, ஆண்டியார் பாளையம், பூரணாங்குப்பம் பகுதிகளை சேர்ந்த சிறந்த விவசாய  பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது. 

    விழாவில் அக்கல்லூரியின் மாணவ-மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து வந்து பல கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். இந்த விழாவில் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த பெண் விவசாயிகள்,   அக்கல்லூரியின் மாணவ-மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 
    விழாவின் முடிவில்  கல்லூரி உதவி பேராசிரியர் தமிழ்ச்செல்வன் நன்றியுரையாற்றினார்.
    அரியாங்குப்பம் பகுதியில் பேனர்கள் அகற்றம்-மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் பொது மக்களுக்கு இடையூறாகவும், விபத்தை ஏற்படுத்தும் வகையில் பேனர், கட்-அவுட் வைக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் ஆணையர் ரமேஷிற்கு புகார் அளித்து வந்தனர். 

    மேலும் உள்ளாட்சி துறை இயக்குனர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகி யோர் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கட்-அவுட், பேனர்களை உடனடியாக அகற்ற நட வடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

    அதனைத்தொடர்ந்து அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் ஆணையர் ரமேஷ் தலைமையில், தாசில்தார் குமரன் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் கட்-அவுட், பேனர்களை அகற்றி வருகின்றனர். 

    இப்பணியில் இளநிலை பொறியாளர் ரகுராமன், வருவாய் ஆய்வாளர்கள் பாலமுருகன், கந்தவேல், இளநிலை எழுத்தர் செழியன் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்ட னர்.

    அரசு அறிவித்த உத்தர வின்படி மீண்டும் பேனர் வைக்கப்பட்டால் அவர்கள் மீது கொம்யூன் பஞ்சாயத்து சட்ட விதிகளின்படி நட வடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் ரமேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டம் இந்த ஆண்டு நடைபெறும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து  அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் வைகாசி மாதம் உற்சவ திருவிழாவும் அதனையொட்டி தேர் திருவிழாவும் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.கொரோனா தொற்று காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தேர் திருவிழா நடைபெறவில்லை. 

    தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால் இந்த ஆண்டு வைகாசி உற்சவ தேர் திருவிழா நடத்த வேண்டும். மேலும், கோவிலுக்கு புதிய தேர் செய்யும் பணியை இந்த ஆண்டே தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    அதே நேரத்தில் தற்போதுள்ள தேரின் உறுதித் தன்மையை ஆராய்ந்து இந்த ஆண்டு உற்சவ தேர்விழா நடத்த வேண்டும்.
    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. 

    மனுவை பெற்று கொண்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி, தேரின் உறுதித்தன்மையை ஆராய்ந்து, இந்த ஆண்டு நிச்சயம்  தேரோட்டம் நடைபெறும் என்று உறுதியளித்தார்.
    இந்த சந்திப்பின் போது  போது ஊர் முக்கியஸ்தர்கள்  உடன் இருந்தனர்.
    புதுச்சேரியில் இருந்து வருகிற 27-ந்தேதி முதல் விமான சேவை தொடங்க உள்ள நிலையில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா தொற்று காரணமாக விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது தொற்று குறைந்த நிலையில் மீண்டும் விமான சேவையை தொடங்க முதல்-அமைச்சர் ரங்கசாமி, சுற்றுலா துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் நடவடிக்கை எடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து வருகிற 27-ந்தேதி முதல் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சார்பில் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்கான முன் பதிவு நேற்று தொடங்கியது. இதன்படி பெங்களூரு, ஐதராபாத்துக்கு மீண்டும் விமான சேவை நடைபெற உள்ளது. வருகிற 27-ந்தேதி புதுச்சேரி வரும் விமானத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் வரவேற்கிறார்கள்.

    ஐதராபாத்தில் இருந்து பகல் 12.05 மணிக்கு புறப்படும் விமானம் மதியம் 1.30 மணிக்கு புதுச்சேரியை வந்தடைகிறது. இங்கிருந்து 1.50 மணிக்கு புறப்படும் விமானம் 2.50 மணிக்கு பெங்களூருவை சென்றடைகிறது.

    அங்கிருந்து 3.20 மணிக்கு புறப்படும் விமானம் 4.10 மணிக்கு புதுச்சேரி வருகிறது. புதுவையில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் விமானம் 6.15 மணிக்கு ஐதராபாத்தை சென்றடைகிறது.
    பள்ளி மாணவர் களின் சுகாதார பதிவு இணையதள தொடக்க விழாவை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்.


    புதுச்சேரி:

    புதுவை சுகாதாரத்துறை சார்பில் தனியார் வங்கி உதவியுடன் பள்ளி மாணவர் களின் சுகாதார பதிவு இணையதள தொடக்க விழா கவர்னர் மாளிகையில்  நடந்தது.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் முன்னிலையில் கவர்னர் தமிழிசை இணையதள சேவையை தொடங்கி வைத்தார். கவர்னரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்ரி, சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு, சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் உடனிருந்தனர். 
    இணையதள பதிவை தொடங்கி வைத்து கவர்னர் தமிழிசை பேசியதாவது:&

    இந்தியாவிலேயே முதன் முறையாக புதுவையில் இந்த இணைய சேவை தொடங்கப் பட்டிருப்பது மகிழ்ச்சியை தருகிறது. சுதாதாரத்துறை, கல்வித்துறை, வங்கி நிறுவனத்தை மனதார பாராட்டுகிறேன். 

    புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து மாணவர் களின் சுகாதாரம் குறித்த விபரங்களை நாம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அரசுக்கு ஏற்கனவே வைத்திருந்தேன்.

    இது ஒரு மிகப்பெரிய கனவு திட்டம். அது இப்போது நடந்தேறியுள்ளது மகிழ்ச்சி தருகிறது. சுகாதார அமைப்புகளின் அறிக்கைப்படி உலகில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இதே நிலைதான்.  

    குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு தொடக்க நிலையிலேயே கண்டறியப்பட்டால் அவர்கள் வளரும்போது அவற்றை சரி செய்ய சுகாதாரப் பதிவு உதவியாக இருக்கும். பெரும்பாலான நோய்களுக்கு காரணம் தொடக்க நிலையிலேயே ரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு சரி செய்யப்படாததுதான். 

    அனைத்து குழந்தை களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.  
    மாணவர்களுக்கு கல்வி பதிவேடு பராமரிக்கப் படுவதைப் போலவே சுகாதார பதிவேடும் பராமரிக்கப்பட வேண்டும். பிரதமர் ஸ்வச் பாரத் இயக்கம் பற்றி கூறியபோது சுத்தம் செய்யும் நிகழ்ச்சியாக மட்டுமே பார்க்கப்பட்டது. 

    அதன்பிறகு நோய்த்தொற்று பெருமளவு குறைந்துள்ளது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் பெருமளவு குறைந்து இருக்கிறது. இதுதான் ஸ்வச் பாரத் திட்டத்தின் பலன். ஊட்டச் சத்து குறை பாட்டை சரி செய்ய கவனம் செலுத்தினால் குழந்தைகளின் உடல், மன வளர்ச்சிக்கும், கல்வியில் முன்னேற்றத்திற்கும் உதவியாக இருக்கும். 

    எல்லா தரவுகளும் கணினி மயமாக்கப்படுவதை பிரதமர் வலியுறுத்துகிறார். அதற்காக இந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற் காக சுகாதாரத்துறை மற்றும்  கல்வித் துறையைப் பாராட்டுகிறேன். குழந்தை களும் ஆரோக்கி யமாகவும் மகிழ்ச்சியாகவும் நல்ல முறை யில் கல்வி பெற வேண்டும்.

    விளையாட்டுகளில் சாதிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். குறிப்பிட்ட காலத்திற்குள் புதுவையில் உள்ள அனைத்து குழந்தை களின் சுகாதாரப் பதிவும் பதிவேற்றம் செய்யப்
    பட வேண்டும். இதில் அங்கன்வாடி குழந்தைகளை யும் இணைத்துக் கொள்ள வேண்டும். 

    குழந்தைகளுக்குப் பரிசோதனை செய்யும் போது தாய்மார்கள் இருக்கும் குறைபாடுகளை கண்டறிய முடியும். இந்த திட்டம் பல்கலைக்கழகத்துக்கும் விரிவுபடுத்தப்படும். 

    புதுவையில் மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரம் குழந்தைகளின் சுகாதார குறிப்புகள் பதிவேற்றம் செய்யப்படும். உடல்நலன் குறித்த தகவல் அனைத்தும் டிஜிட்டல்மயப்படுத்தினால் உடனடியாக அனைத்து விபரங்களும் கிடைக்கும். 

    குழந்தைகளின் இதய பிரச்சினை, ஊட்டச்சத்து, பார்வை, கேட்கும் திறன் கண்டறிந்து சரிசெய்ய முடியும். எந்த பரிசோதனை செய்யப்பட்டாலும், அதன் விபரங்கள் பதிவு செய்யப்படும். குறைபாடு உள்ள குழந்தை கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவர். 

    புதுவையில் குழந்தை பெற்ற பெண்களுக்கு பரிசு பெட்டகம் தர முதல்& அமைச்சருடன் ஆலோசனை நடத்தியுள்ளோம்.மாணவர் களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தால் ஆரோக்கியமான புதுவையை உருவாக்கலாம்.  

    இவ்வாறு கவர்னர் தமிழிசை தெரிவித்தார். 


    8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவையில் 608 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    புதிதாக 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. காரைக்காலில் 6, மாகியில் 2 பேர் என 8 பேர் தொற்று டன் சிகிச்சை பெற்று  வருகின்றனர்.  புதுவையில் 2, காரைக்காலில் ஒருவர் என 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    புதுவையில் 2,  காரைக் காலில் 3 பேர் என 5 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். புதுவை மாநிலத்தில்  ஒட்டு மொத்தமாக  இதுவரை ஒரு லட்சத்து 65 ஆ யிரத்து 756 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 765 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். புதுவையில் 10, காரைக்காலில் 12, மாகியில் 4 பேர் என 26 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத் தில் இப்போது 29 பேர்  கொரோனா தொற்றுடன் உள்ளனர். 

    மாநிலத்தில்  கொரோ னாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது. புதுவையில் 2-வது  தவணை உட்பட 15 லட்சத்து 99 ஆயிரத்து 515 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    மதுக்கடைகளில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பலால் ரூ.500 நோட்டுகளை வாங்க மக்கள் மறுக்கிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை பிள்ளைத் தோட்டம் பள்ளத்தெருவை சேர்ந்தவர் ஜெயபால்(24) பெயிண்டர்.

    இவரின் நண்பர் புது சாரம் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்த மனோஜ்(29). இருவரும் திருவள்ளுவர் சாலையில் உள்ள மதுபான கடையில் ரூ.500 கொடுத்து மதுபானம் வாங்கினர். 

    அந்த நோட்டு கள்ள நோட்டு என்பதால் கடை மேலாளர் பிரபாகரன், உருளையன்பேட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தார். 

    இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் ஜெயபால், மனோஜ் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அப்போது அரும்பார்த்தபுரம் ஆட்டோ டிரைவர் சரண் என்பவரிடம் கள்ள நோட்டு வாங்கியது தெரியவந்தது. 

    சரணை கைது செய்து விசாரித்த போது, ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் மோகன்கமல் (31) என்பவரிடம் கள்ளநோட்டு வாங்கி புழக்கத்தில் விட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் மோகன் கமல் உட்பட 4 பேரையும் கைது செய்து விசாரித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், மோகன் கமல் சென்னையில் ஒரு கும்பலிடம் ரூ.10 ஆயிரத் துக்கு ரூ.50 ஆயிரம் என்ற விகிதத்தில் ரூ.4 லட்சத்துக்கு கள்ள நோட்டுக்களை வாங்கியுள்ளார்.

    இதை ரூ.20 ஆயிரத்துக்கு ரூ.50 ஆயிரம் என புதுவையில் புழக்கத்தில் விட்டுள்ளார் என தெரிய வந்தது. போலீசார் இவர்களிடமிருந்து 483 கள்ள நோட்டுக்களை பறிமுதல் செய்தனர். 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    4 மாதத்துக்கும் மேலாக கள்ள நோட்டுக்கள் புதுவையில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. குறிப்பாக மதுபான கடைகளில் கூட்டம் அதிகமான நேரத்தை பயன்படுத்தி நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர். 

    இதனால் சுமார் ரூ.1 கோடி வரை புதுவையில் கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக் கின்றனர். சென்னையில் கள்ள நோட்டுகளை கொடுத்த கும்பல் குறித்து விசாரணை நடத்த தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். 

    கள்ளநோட்டுகள் எங்கு அச்சடிக்கப்பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்த தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் புதுவைக்கு வர உள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். 

    புதுவை முழுவதும் ரூ.500 கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளதால் பொதுமக்கள் கவனமாக பார்த்து நோட்டுக்களை வாங்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி யுள்ளனர். இந்த சம்பவத்தால் மதுபான கடை உரிமையாளர்கள் தங்களிடம் வந்துள்ள ரூ.500 நோட்டுகளை சரிபார்த்து வருகின்றனர். 

    தங்கள் கடைகளில் ரூ.500 நோட்டு கொடுத்தால் அதை கவனமாக பார்த்து வாங்கும்படி ஊழியர்களுக்கும் அறிவுறுத் தியுள்ளனர். பெட்ரோல் பங்குகளிலும் ரூ.500 நோட்டுகளை சரிபார்த்து வாங்க உரிமையாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 
    இதனால் ரூ.500 நோட்டு களை வாங்க பொதுமக்களும், வியாபாரிகளும் அச்ச மடைந்துள்ளனர்.
    தவளக்குப்பத்தில் 102 விவசாயிகளுக்கு நெற்பயிருக்கான பயிர் காப்பீட்டை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்.
    புதுச்சேரி:

    தவளக்குப்பம் உழவர் உதவியகத்தில், சம்பா நெல் பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு “எனது காப்பீடு எனது கையில்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு  உழவர் உதவியக வேளாண் அலுவலர் சிவசுப்பிரமணியன் வரவேற்றார். புதுவை  கோட்ட இணை வேளாண் இயக்குனர் சிவபெருமான் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதன் அவசியம் பற்றி விளக்கினார்.நேஷனல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனின் மூத்த கோட்ட மேளாலர் மோகன் பயிர் காப்பீட்டின் நோக்கம் குறித்து விளக்கினார்.

    சிறப்பு  விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் கலந்துகொண்டு, பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2021&22ம் ஆண்டு சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு செய்துள்ள 102 விவசாயிகளுக்கு நெற்பயிர்க்கான பயிர்காப்பீடு பத்திரத்தை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் கிருஷ்ணமூர்த்தி, லட்சுமிகாந்தன், சக்திபாலன், உழவரக களப்பணியாளர் மாசிலாமணி பலர் கலந்து கொண்டனர். 

    இம்முகாமில் தவளக்குப்பம், பூரணாங்குப்பம், மணவெளி, டி.என்.பாளையம், அபிஷேகப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். நெல்பயிர் பாதிப்பு காலத்தில் சுமார் 250 ஏக்கர் நில விவசாயிகள் பயன்பெறுவர். ஒரு ஏக்கருக்கு இழப்பீடாக ரூ.27ஆயிரம் பெற முடியும் என கூறப்படுகிறது.
    தொகுதி மேம்பாட்டு நிதியை முதலியார்பேட்டை தொகுதிக்கு செலவு செய்ய வேண்டும்- என்று சம்பத் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.
    புதுச்சேரி:

    பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ. அசோக்பாபு தனது எம்.எல்.ஏ. நிதி முழுவதையும் முதலியார்பேட்டை தொகுதியில் அடிப்படை வசதிகள் மேம்பாட்டுக்காக செலவு செய்ய வேண்டும் என சம்பத் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முதலியார்பேட்டை தொகுதியில் பல ஆண்டுகளாக மக்களுக்கு அடிப்படை தேவைகளான சாலை வசதி, வடிகால், வாய்க்கால் வசதி, மின் விளக்குகள் ஆகியவை முறையாக செயல்படுத்தப்படாமல் உள்ளது. புதிதாக நகர்கள் உருவாகி உள்ளன. ஆனால், அவற்றுக்கு தேவையான சாலை வசதிகள், வடிகால் வசதிகள், தெருமின் விளக்குகள் செய்து தரப்படாமல் உள்ளது.

    தாங்கள் உள்பட 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் உள்ளீர்கள். நியமன எம்.எல்.ஏ. அவர் விரும்பும் எந்த தொகுதிக்கும் அவரது தொகுதி மேம்பாட்டு நிதியை செலவிடும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 3 நியமன எம்.எல்.ஏ.க்களில் இருவரும் ராஜ்பவன் தொகுதியில் வசித்து வந்தாலும், இவர்கள் தங்களுக்கு என்று தொகுதி அலுவலகம் வைத்துக்கொள்ளவில்லை. 

    தாங்கள் முதலியார் பேட்டை சட்டமன்ற தொகுதியில் வசித்து வருகிறீர்கள். மேலும் அரசின் சார்பில் புதுவை நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அரசின் நிதியில் முதலியார்பேட்டை தொகுதியில் அலுவலகம் வைத்துள்ளீர்கள். 

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. என்ற முறையில் மக்களுக்கு எனது தொகுதி மேம்பாட்டு நிதியை முழுவதும் பயனுள்ளதாக மாற்றி வருகிறேன். மற்ற 2 நியமன எம்.எல்-.ஏ.க்களை காட்டிலும் தொகுதியில் அலுவலகத்தோடு தாங்கள் இருப்பதால் தங்களின் முழு தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ.1.10 கோடியை முதலியார்பேட்டை தொகுதிக்கு செலவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
    கூனிச்சம்பட்டில் உலக மகளிர் தின விழாவில் கலந்து அமைச்சர் நமச்சிவாயம் பரிசு வழங்கினார்.
    புதுச்சேரி:

    திருக்கனூர்  அருகே உள்ள கூனிச்சம்பட்டு கிராமத்தில்  உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு புதுவை  பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில்  மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. 

    புதுவை பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய முதல்வர்  ஜாகிர் உசேன் வரவேற்றார்.   வேளாண் துறை இயக்குனர் பால காந்தி முன்னிலை வகித்தார். தொகுதி  எம்.எல்.ஏ.வும், உள்துறை அமைச்சருமான நமச்சிவாயம் விழாவிற்கு தலைமை தாங்கினார்.

    விழாவில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான மகளிர் செய்திருந்த உணவுப் பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டு இருந்தது. அதனை அமைச்சர் நமச்சிவாயம் பார்வையிட்டு  சிறந்த உணவு பொருட்களை தயாரித்த பெண்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார். இதில்  ஏராளமான பொதுமக்கள், வேளாண்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதனைத்தொடர்ந்து அங்குள்ள இருளர் குடியிருப்பு பகுதியில் அப்பகுதி மக்களை அமைச்சர் நமச்சிவாயம்  சந்தித்தார். அவர்கள் தங்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

    இதுகுறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.  இதில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    மதகடிப்பட்டு வாரச்சந்தையில் கால்நடைகளுக்கு இறங்கு தளம் அமைக்கும் பணியை வைத்திலிங்கம் எம்.பி. தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    திருபுவனை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதகடிப்பட்டு பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி யின் கீழ் 4 லட்சத்து 80 ஆயிரம் செலவில்  மதகடிப் பட்டு வாரச்சந்தையில் கால்நடை மற்றும் பொது மக்களுக்கு கூடுதல் வசதி செய்தல் பணியின் கீழ் கால்நடைகளுக்கு இறங்கு தளம் அமைத்தல் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில்,   
    வைத்திலிங்கம் எம்.பி., அங்காளன் எம்.எல்.ஏ. ஆகியோர் பூமி பூஜை செய்து  பணியை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், இள நிலை பொறியாளர் மனோ கரன், பாஸ்கர்  மற்றும் பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.
    கரிக்கலாம்பாக்கத்தில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே கரிக்கலாம்பாக்கம் வேத வள்ளி நகரை சேர்ந்தவர் சசிந்திரன். இவர் கோர்க் காட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். 

    இவரது மனைவி ஜெயந்தி (வயது39). இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் ஜெயந்தி மனவருத்தத்தில் இருந்து வந்தார். 

    அவருக்கு சசிந்திரன் ஆறுதல் கூறி வந்தார். இருவரும் சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்தனர். ஆனாலும், குழந்தை இல்லாததால் ஜெயந்தி விரக்தியில் இருந்தார். 

    இந்நிலையில்   கணவன்&மனைவி சாப்பிட்டு வீட்டில் தூங்கினர்.   சசிந்திரன் தூங்கி எழுந்து பார்த்த போது வீட்டின் ஒரு அறையில் ஜெயந்தி மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    குழந்தை இல்லாத ஏக்கத்தில் ஜெயந்தி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதுகுறித்து சசிந்திரன் கொடுத்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×