என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
பெண் தூக்குபோட்டு தற்கொலை
கரிக்கலாம்பாக்கத்தில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே கரிக்கலாம்பாக்கம் வேத வள்ளி நகரை சேர்ந்தவர் சசிந்திரன். இவர் கோர்க் காட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி ஜெயந்தி (வயது39). இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் ஜெயந்தி மனவருத்தத்தில் இருந்து வந்தார்.
அவருக்கு சசிந்திரன் ஆறுதல் கூறி வந்தார். இருவரும் சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்தனர். ஆனாலும், குழந்தை இல்லாததால் ஜெயந்தி விரக்தியில் இருந்தார்.
இந்நிலையில் கணவன்&மனைவி சாப்பிட்டு வீட்டில் தூங்கினர். சசிந்திரன் தூங்கி எழுந்து பார்த்த போது வீட்டின் ஒரு அறையில் ஜெயந்தி மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
குழந்தை இல்லாத ஏக்கத்தில் ஜெயந்தி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து சசிந்திரன் கொடுத்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






