என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. ரங்கசாமியிடம் மனு அளித்த போது எடுத்த படம்.
    X
    எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. ரங்கசாமியிடம் மனு அளித்த போது எடுத்த படம்.

    திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டம்-ரங்கசாமி உறுதி

    வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டம் இந்த ஆண்டு நடைபெறும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து  அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் வைகாசி மாதம் உற்சவ திருவிழாவும் அதனையொட்டி தேர் திருவிழாவும் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.கொரோனா தொற்று காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தேர் திருவிழா நடைபெறவில்லை. 

    தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால் இந்த ஆண்டு வைகாசி உற்சவ தேர் திருவிழா நடத்த வேண்டும். மேலும், கோவிலுக்கு புதிய தேர் செய்யும் பணியை இந்த ஆண்டே தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    அதே நேரத்தில் தற்போதுள்ள தேரின் உறுதித் தன்மையை ஆராய்ந்து இந்த ஆண்டு உற்சவ தேர்விழா நடத்த வேண்டும்.
    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. 

    மனுவை பெற்று கொண்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி, தேரின் உறுதித்தன்மையை ஆராய்ந்து, இந்த ஆண்டு நிச்சயம்  தேரோட்டம் நடைபெறும் என்று உறுதியளித்தார்.
    இந்த சந்திப்பின் போது  போது ஊர் முக்கியஸ்தர்கள்  உடன் இருந்தனர்.
    Next Story
    ×