என் மலர்
இந்தியா

இணையத்தில் வைரலாகும் 'ஐஸ்கிரீம்' பிரியாணி- வீடியோ
- சந்தையில் அறிமுகமாகி உள்ள ஐஸ்கிரீம் பிரியாணி உணவு பிரியர்களை கதிகலங்க வைத்துள்ளது.
- வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் விமர்சன கருத்துக்களுடன் வைரலாகி வருகிறது.
உணவு பிரியர்கள் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்று பிரியாணி. மட்டன், சிக்கன், இறால், மீன், வெஜிடபிள், என எவ்விதமான பிரியாணி வகைகளாக இருந்தாலும் அதனை உணவு பிரியர்கள் ருசித்து சாப்பிட்டு ஏப்பம் விட்டுவிடுவார்கள். ஆனால் சந்தையில் அறிமுகமாகி உள்ள ஐஸ்கிரீம் பிரியாணி உணவு பிரியர்களை கதிகலங்க வைத்துள்ளது.
மும்பையை சேர்ந்தவர் ஹீனா. சமையற்கலை நிபுணரான இவர் சொந்தமாக பேக்கரி ஒன்றை நிறுவி நடத்தி வருகிறார். வலைத்தளத்தில் கணக்கு தொடங்கி தன்னுடைய உணவு குறிப்புகளை வீடியோவாக பதிவேற்றம் செய்து பிரபலமாக உள்ளார். அவர் 'ஐஸ்கிரீம்' பிரியாணி தயாரிப்பு வீடியோவை வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
2 பெரிய பிரியாணி அண்டாக்களுக்கு அருகே நின்று அதில் ஐஸ்கிரீமை கலந்து 'ஐஸ்கிரீம்' பிரியாணி தயாரிக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் விமர்சன கருத்துக்களுடன் வைரலாகி வருகிறது.






