என் மலர்tooltip icon

    இந்தியா

    உன்னிப்பாக கவனிக்கிறோம் - அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல் வெனிசுலா விவகாரம் தொடர்பாக இந்தியா அறிக்கை
    X

    'உன்னிப்பாக கவனிக்கிறோம்' - அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல் வெனிசுலா விவகாரம் தொடர்பாக இந்தியா அறிக்கை

    • அமைதியான பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்
    • காரகாஸில் உள்ள இந்தியத் தூதரகம் இந்தியச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பில் உள்ளது மற்றும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்கும்

    வெனிசுலா நாட்டின்மீது திடீர் தாக்குதல் நடத்தி, அந்நாட்டு அதிபர் மற்றும் அவரது மனைவியை அமெரிக்கா சிறைபிடித்துள்ளது. மேலும் வெனிசுலாவின் எண்ணெய் இருப்பை இனி தாங்கள்தான் நிர்வகிப்போம் எனவும் அறிவித்துள்ளது.

    மறுபுறம் வெனிசுலாவில் பதற்றமான சூழல் நிலவுவதால், அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த அதிகாரமீறலுக்கு உலகின் பலநாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவும் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,

    "வெனிசுலாவில் அரங்கேறிவரும் சமீபத்திய நிகழ்வுகள் ஆழ்ந்த கவலையளிக்கின்றன. வெனிசுலாவில் மாறிவரும் ஒவ்வொரு நிலையையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். வெனிசுலா நாட்டு மக்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பிற்கான தனது ஆதரவை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது. அமைதியான பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், இதன் மூலம் அப்பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த முடியும்.

    காரகாஸில் உள்ள இந்தியத் தூதரகம் இந்தியச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பில் உள்ளது மற்றும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்கும்." என தெரிவித்துள்ளது.

    Next Story
    ×