என் மலர்
இந்தியா

வாக்காளர் முறைகேடு: சொந்த கட்சியை விமர்சித்த கர்நாடக அமைச்சர் ராஜினாமா
- அப்போது கட்சித் தலைவர்கள் ஏன் அமைதியாக இருந்தனர் என்றும் கேள்வி எழுப்பினார்.
- முதல்வர் சித்தராமையாவுடன் நெருக்கமாக இருந்தபோதிலும், கட்சி அழுத்தத்தின் கீழ் ராஜண்ணா ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தேர்தல் ஆணையத்திற்கு எதிரான ராகுல் காந்தியின் 'வாக்கு திருட்டு' குற்றச்சாட்டுகளை கர்நாடக கூட்டுறவு அமைச்சர் கே.என். ராஜண்ணா பகிரங்கமாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று திடீரென தனது பதவியை ராஜூனாமா செய்வதாக அறிவித்தார்.
2024 மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
இருப்பினும், இந்த முறைகேடுகள் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடந்ததாகக் கூறிய ராஜண்ணா, அப்போது கட்சித் தலைவர்கள் ஏன் அமைதியாக இருந்தனர் என்றும் கேள்வி எழுப்பினார்.
கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டிற்கு எதிராக ராஜண்ணாவின் பேச்சு, கட்சி உயர்மட்டத்தையும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்களையும் கோபப்படுத்தியது. கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் மற்றும் பல காங்கிரஸ் தலைவர்கள் ராஜண்ணாவின் கருத்துக்களை விமர்சித்தனர்.
முதல்வர் சித்தராமையாவுடன் நெருக்கமாக இருந்தபோதிலும், கட்சி அழுத்தத்தின் கீழ் ராஜண்ணா ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முதல்வர் சித்தராமையாவுடன் கலந்துரையாடிய பிறகு ராஜண்ணா தனது ராஜினாமாவை சமர்ப்பித்தார்.
இதை பாஜக தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து வருகிறது.






