என் மலர்
இந்தியா

VIRAL VIDEO: போர்க்களமான பிரியாணி விருந்து.. பீகாரில் ஓவைசி கட்சி வேட்பாளர் ஆதரவாளர்கள் அட்ராசிட்டி
- இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது.
- வேட்புமனு தாக்கலுக்கு அவர் தனது ஆதரவாளர்களுக்கு வீட்டில் வைத்து பிரமாண்டமான முறையில் பிரியாணி விருந்து அளித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது.
ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்-பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் லாலு பிரசாத்தின் ஆர்ஜேடி - காங்கிரஸ் இந்தியா கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இதற்கிடையே இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது.
வேட்புமனு தாக்கல் தற்போது நடந்து வரும் சூழலில் பீகாரின் கிஷன்கஞ்ச் தொகுதியில் போட்டியிட உள்ள தவுசிப் ஆலம் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கலுக்கு அவர் தனது வீட்டில் வைத்து ஆதரவாளர்களுக்கு பிரமாண்டமான முறையில் பிரியாணி விருந்துக்கு ஏற்பாடு செய்தார்.
இந்த விருந்தில் 10,000 க்கும் மேற்பட்டோர் திரண்ட நிலையில் பிரியாணி பொட்டலங்களை அள்ளிச் செல்ல முந்திக்கொண்டு தள்ளுமுழுப்பட்டதால் அப்பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி விமரிசனத்துக்கு உள்ளாகி வருகிறது.






