என் மலர்tooltip icon

    இந்தியா

    VIDEO: கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியை மரத்தில் கட்டி வைத்து தாக்குதல்
    X

    VIDEO: கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியை மரத்தில் கட்டி வைத்து தாக்குதல்

    • ஆளும் தெலுங்கு தேசம் கட்சி (TDP) உறுப்பினர் எஸ். மணிகப்பா கைதுசெய்யப்பட்டார்.
    • மணிகப்பா உடன், அவரது மனைவி மற்றும் அவரது மனைவியின் மைத்துனியும் சிரிஷாவை தாக்கியுள்ளனர்.

    ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டம் நாராயணபுரம் கிராமத்தில், கணவர் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாததால், மனைவியை மரத்தில் கட்டி வைத்து அடித்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    ஆளும் தெலுங்கு தேசம் கட்சி (TDP) உறுப்பினர் எஸ். மணிகப்பா என்பவர், 28 வயதான சிரிஷா என்பவரை, அவரது இரண்டு குழந்தைகள் முன்னிலையில் வீட்டிலிருந்து இழுத்துச் சென்று மரத்தில் கட்டி வைத்து அடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    சிரிஷாவின் கணவர் ஆர். திம்மப்பா, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மணிகப்பாவிடம் ரூ.80,000 கடன் வாங்கியுள்ளார். திம்மப்பா பெங்களூரு சென்றிருந்த நிலையில், தவணைகள் நிறுத்தப்பட்டதால், சிரிஷாவை தாக்கியுள்ளனர்.

    மணிகப்பா உடன், அவரது மனைவி மற்றும் அவரது மனைவியின் மைத்துனியும் சிரிஷாவை தாக்கியுள்ளனர்.

    இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, மணிகப்பா உட்பட ஐந்து பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×