search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலமாக உத்தரகாண்ட் இருக்கும் - ராஜ்நாத் சிங்
    X

    பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலமாக உத்தரகாண்ட் இருக்கும் - ராஜ்நாத் சிங்

    உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்திருந்த உத்தராயணி கவுதிக் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் ஏதேனும் ஒரு மாநிலம் முதலிடம் பெறப்போகிறது என்றால் அது உத்தரகாண்டாக தான் இருக்கும் என நான் நினைக்கிறேன் என்றார்.

    2022ம் ஆண்டு நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தலின்போது பாஜக அளித்த முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று பொது சிவில் சட்டம். உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, தனது தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே பொது சிவில் சட்டம் உருவாக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன பிரகாஷ் தேசாய் தலைமையிலான ஒரு குழுவை அமைத்து ஒப்புதல் அளித்தார்.

    கடந்த 5 ஆண்டுகளில் உத்தரகாண்ட் மாநிலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் இடையேயான உறவுகளைப் பற்றி குறிப்பிட்ட அவர், ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்ட பிறகு இரு மாநிலங்களுக்கும் இடையே தீர்க்கப்படாத பல பிரச்னைகள் இருந்து வருகிறது. ஆனால் உத்தரபிரதேசம் பிரிக்கப்பட்ட பிறகு, இதுபோன்ற பிரச்னைகள் நடக்கவில்லை என்றார்.

    உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் இடையேயான உறவு வலுவாக உள்ளதாக தெரிவித்த அமைச்சர் ராஜ்நாத் சிங், இரு மாநிலங்களிலும் வசிக்கும் மக்களுக்கு இடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லாமல் உறவுகள் வலுபெற்று வருகிறது என்றார்.

    Next Story
    ×