என் மலர்
இந்தியா

எரிபொருள் பற்றாக்குறை... திருவனந்தபுரத்தில் அவசரமாக தரை இறங்கிய இங்கிலாந்து விமானம்
- எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டதால், அவரசமாக தரை இறக்க விமானி அனுமதி கேட்டுள்ளார்.
- விமானத்திற்கு எரிபொருள் நிரப்ப மத்திய அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்தின் எப்-35 போர் விமானம் நேற்று இரவு திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குறுகிய புறப்பாடு மற்றும் செங்குத்தாக தரையிறங்கும் திறன்கள் கொணட இந்த விமானம் நடுவானில் பறந்த போது எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டதால், அவரசமாக தரை இறக்க விமானி அனுமதி கேட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து அதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக தெரிகிறது. அந்த விமானத்திற்கு எரிபொருள் நிரப்ப மத்திய அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா 171 (போயிங் 787-8) விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானிநகர் குடியிருப்பு பகுதி அருகே கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு பயணியை தவிர மற்ற 242 பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.