என் மலர்tooltip icon

    இந்தியா

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: அமித் ஷா நாட்டிற்கு பதில் சொல்ல வேண்டும்- திரிணாமுல் காங்கிரஸ்
    X

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: அமித் ஷா நாட்டிற்கு பதில் சொல்ல வேண்டும்- திரிணாமுல் காங்கிரஸ்

    • ஜம்மு- காஷ்மீருக்கான எல்லாம் நன்றாக இருக்கிறது என்ற கதை போதும்.
    • நாட்டின் உள்துறை அமைச்சரான அமித் ஷா நாட்டு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.

    ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்த வந்த போதிலும், பாதுகாப்பு குறைபாடு, உளவுத்துறை தோல்வி இதற்கு முக்கிய காரணம் என விமர்சித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் குணால் கோஸ் கூறும்போது "நாட்டின் உள்துறை அமைச்சரான அமித் ஷா நாட்டு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். எது மிகப்பெரிய மற்றும் மன்னிக்க முடியாத பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை தோல்வி ஆகும். அவர் கட்டாயம் ராஜினாமா செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்

    திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மவுமா மொய்த்ரி "ஜம்மு- காஷ்மீருக்கான எல்லாம் நன்றாக இருக்கிறது என்ற கதை போதும். போலி கதைகளை பரப்புவதை நிறுத்திவிட்டு இனிமேல் அப்பாவி மக்கள் உயிரிழக்காதபடி உறுதியான நடவடிக்கை எடுங்கள்" என தெரிவித்துள்ளார்.

    மேற்கு வங்க மாநில கல்வித்துறை அமைச்சர் பிரத்யா பாஸ் கூறுகையில் "பயங்கரவாதிகள் ஏன் பஹல்காமை அடைய அனுமதிக்கப்பட்டனர்? இந்த அர்த்தமற்ற படுகொலையைத் தடுக்க படைகள் ஏன் தலையிடவில்லை?. இது மீண்டும் புல்வாமா. அமித் ஷா ராஜினாமா செய்வதன் மூலம் தேசத்திற்கு ஒரு நன்மை செய்வார்" எனத் தெரிவித்தார்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்களின் விமர்சனங்களுக்கு பாஜக மாநில தலைவர் சுகந்தா மஜும்தார் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் "இறந்த உடல்கள் மீது தனது மலிவான அரசியலை செய்ய திரிணாமுல் காங்கிரஸ்க்கு போதுமான நேரம் இருக்கும். ஆனால் இது சரியான நேரம் இல்லை. குற்றவாளிகளை பிடிக்க மத்திய அரசும் பாதுகாப்பு அமைப்புகளும் எல்லாவற்றையும் செய்கின்றன. பயங்கரவாதிகள் தப்பிவிட முடியாது" என்றார்.

    Next Story
    ×