என் மலர்
இந்தியா

உலகின் மிக உயரமான 'ஒற்றுமை சிலை'யை வடிவமைத்த சிற்பக் கலைஞர் மறைவு
- குஜராத்தில் நர்மதா நதிக்கரையில் அமைந்துள்ள உலகிலேயே உயரமான சிலையான சர்தார் வல்லபாய் படேலின் 'ஒற்றுமை சிலை'யை வடிவமைத்தார்.
- சிற்பக் கலைக்கு அவர் செய்த சேவைகளைப் பாராட்டி, இந்திய அரசு, 1999-ல் பத்மஸ்ரீ விருதையும், 2016-ல் பத்மபூஷண் விருதையும் வழங்கி கௌரவித்தது.
புகழ்பெற்ற இந்திய சிற்பியும் பத்ம பூஷண் விருது பெற்றவருமான ராம் சுதர் காலமானார். அவருக்கு வயது 100.
வயது முதிர்வு காரணமாக உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள தனது மகனின் இல்லத்தில் அவர் காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
பிப்ரவரி 19, 1925 அன்று மகாராஷ்டிராவின் கோண்டூர் கிராமத்தில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த ராம் சுதர் தனது திறமையால் சிற்பக் கலைஞராக உருவெடுத்தார்.
குஜராத்தில் நர்மதா நதிக்கரையில் அமைந்துள்ள உலகிலேயே உயரமான சிலையான சர்தார் வல்லபாய் படேலின் 'ஒற்றுமை சிலை' உள்ளிட்ட பிரமாண்ட சிலைகளை ராம் சுதர் வடிவமைத்திருந்தார்.
சிற்பக் கலைக்கு அவர் செய்த சேவைகளைப் பாராட்டி, இந்திய அரசு, 1999-ல் பத்மஸ்ரீ விருதையும், 2016-ல் பத்மபூஷண் விருதையும் வழங்கி கௌரவித்தது. அவரது மறைவுக்கு அரசியல் மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.






