என் மலர்
இந்தியா

பயங்கரவாதம் பாம்பை போன்றது: மீண்டும் தலை தூக்கினால் நசுக்கப்படும்- பீகாரில் பிரதமர் மோடி பேச்சு
- பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முடிவடையவும் இல்லை, நிறுத்தப்படவும் இல்லை.
- பயங்கரவாதம் பாம்பை போன்றது. மீண்டும் துலை தூக்கினால் நசுக்கப்படும்.
பிரதமர் மோடி இன்று பீகார் மாநிலம் சென்றிருந்தார். கராகட் என்ற இடத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-
பஹல்காம் தாக்குதலில் நம்முடைய சகோதரிகள், அவர்களுடைய கணவர்களை இழந்த ஒரு சில நாட்களுக்குப் பிறகு மதுபானி மாவட்டத்திற்கு வந்திருந்தேன். குற்றவாளிகள் தக்க தண்டனை பெறுவார்கள். அவர்கள் நினைத்து பார்க்க முடியாத வகையில் தண்டனை இருக்கும் என வாக்குறுதி அளித்திருந்தேன். நான் தெரிவித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றிய பின்னர், இன்று மீண்டும் பீகார் வந்துள்ளேன்.
இந்தியப் பெண்கள் அணியும் சிந்தூரின் (குங்குமம்) சக்தியை பாகிஸ்தான் மற்றும் உலகம் முழுவதும் கண்டது. பாகிஸ்தான் ராணுவத்தின் பாதுகாப்பில் பயங்கரவாதிகள் பாதுகாப்பாக உணர்ந்தார்கள். ஆனால் அவர்களை மண்டியிட வைத்தோம்.
பாகிஸ்தானின் விமானப்படை தளங்களையும், அவர்களின் ராணுவ அமைப்புகளையும் அழித்தோம். இது புதிய இந்தியா (நயா பாரதம்), அதன் சக்தி அனைவரும் காணக்கூடியதாக உள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் பயங்கரவாதத்திற்கு எதிரான சிறு பொறிதான். அவற்றிற்கு எதிரான போர் முடிவடையவும் இல்லை. நிறுத்தப்படவும் இல்லை. பயங்கரவாதம் பாம்பை போன்றது. மீண்டும் துலை தூக்கினால் புற்றில் இருந்து வெளியே இழுக்கப்பட்டு, நசுக்கப்படும்.
.இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.






