search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை ஓடஓட விரட்டி சுட்டுக்கொன்ற கணவன்
    X

    நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை ஓடஓட விரட்டி சுட்டுக்கொன்ற கணவன்

    • பூஜாவின் தாய் ஷீலா தேவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பரேலி:

    உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி பதே கஞ்ச் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு சந்தை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணபால் லோதி (வயது 40). இவர் கடந்த 2012-ல் பூஜா என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.

    இந்த நிலையில் கிருஷ்ணா பால் கடந்த மாதம் ஒரு கொலை முயற்சி வழக்கில் சிக்கினார். பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அவர் இரு தினங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.

    தனது வீட்டுக்கு சென்ற அவரிடம், அவரது மனைவி முன்பு போல பாசம் காட்டவில்லை. இதனால் மனைவியின் நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. சம்பவத்தன்று அவரின் மைனர் குழந்தைகள் முன்னிலையில் மனைவியை உல்லாசத்திற்கு அழைத்தார்.

    இதற்கு அவர் ஒப்புக்கொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த கிருஷ்ணா பால் வீட்டில் இருந்த நாட்டு துப்பாக்கி எடுத்துக்கொண்டு மனைவியை மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பூஜா வீட்டை விட்டு வெளியே ஓடினார். ஆனால் விடாமல் துரத்தி சென்று பூஜாவை ஓட, ஓட சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார்.

    இதனை தடுக்க வந்த மனைவியின் தோழி முன்னா (30) என்பவர் மீதும் தோட்டா பாய்ந்தது. அவர் படுகாயத்துடன் உயிர் தப்பினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    போலீசார் கிருஷ்ண பாலை கைது செய்தனர். அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் தனது மனைவி தன்னை ஏமாற்றி விட்டார். அதனால் அவரை சுட்டுக்கொலை செய்தேன் அவள் இறக்க தகுதியானவள். அவளைக் கொன்றதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை எனக் கூறியுள்ளார்.

    இது குறித்து பூஜாவின் தாய் ஷீலா தேவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடத்தையில் சந்தேகப்பட்டு நாட்டு துப்பாக்கியால் மனைவியை சுட்டுக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×