search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்ற சிறப்பு கூட்டம்: இதைபற்றி நிச்சயம் பேசியே ஆகனும் - பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்
    X

    பாராளுமன்ற சிறப்பு கூட்டம்: இதைபற்றி நிச்சயம் பேசியே ஆகனும் - பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்

    • பாராளுமன்ற சிறப்பு கூட்டம் எதற்காக கூட்டப்படுகிறது என்ற காரணம் எங்களுக்கு தெரியாது.
    • பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் இது குறித்து விவாதம் நடத்த சோனியா காந்தி வலியுறுத்தல்.

    பாராளுமன்ற சிறப்பு கூட்டம் எதற்காக நடத்தப்படுகிறது என்பது பற்றி விளக்கம் அளிக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதி இருக்கிறார். இந்தியாவில் செப்டம்பர் 18-ம் தேதி துவங்கி செப்டம்பர் 22-ம் தேதி என ஐந்து நாட்களுக்கு நடைபெற இருக்கிறது.

    இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு, எழுதி இருக்கும் கடிதத்தில் நாட்டில் நிலவி வரும் பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று சோனியா காந்தி வலியுறுத்தி இருக்கிறார். பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில் சோனியா காந்தி குறிப்பிட்டு இருப்பதாவது.,

    "மற்ற அரசியல் கட்சிகளுடன் கலந்து ஆலோசனை செய்யாமலேயே இந்த பாராளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டப்படுகிறது. எதற்காக இந்த பாராளுமன்ற சிறப்பு கூட்டம் எதற்காக கூட்டப்படுகிறது என்ற காரணம் எதுவுமே எங்களுக்கு தெரியாது. ஐந்து நாட்களுக்கு அரசு அலுவல் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டு இருப்பது பற்றிய தகவல் மட்டுமே எங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது."

    "பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், இதில் மக்கள் பிரச்சினைகளை எழுப்பி, அதுபற்றிய விவாதம் நடத்துவதற்கு இது வாய்ப்பளிக்கிறது. அந்த வகையில் இந்த முறை சரியான விதிகளுடன் விவாதம் மற்றும் ஆலோனைகளை செய்வதற்கு நேரம் ஒதுக்கப்படும் என்று நினைக்கிறேன்," என்று அவர் தெரிவித்து உள்ளார்.

    நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் அதிக முக்கியத்துவத்துடன் கையாளப்பட வேண்டிய சூழலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி- மணிப்பூர் கலவரம், ஹரியானா மற்றும் சில மாநிலங்களில் ஏற்பட்டு வரும் சாதி, மத மோதல் தொடர்பான பதற்ற நிலை, இந்தியா-சீனா இடையே எல்லை பிரச்சினை, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான தேவை, தற்போதைய பொருளாதார நிலை காரணமாக அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை மற்றும் பல்வேறு விவகாரங்கள் பற்றி பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று நம்புவதாக சோனியா காந்தி மேலும் தெரிவித்தார்.

    Next Story
    ×