search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதியில் ஆன்லைன் மூலம் ரூ.2.60 லட்சம் மோசடி-  வாலிபர்கள் கைது
    X

    திருப்பதியில் ஆன்லைன் மூலம் ரூ.2.60 லட்சம் மோசடி- வாலிபர்கள் கைது

    • ஸ்கிரீன் ஷாட் அனுப்பிய சிறிது நேரத்திலேயே சேகர் வங்கி கணக்கிலிருந்து ரூ.30 ஆயிரம், 63 ஆயிரத்து 900, 80 ஆயிரம், 90 ஆயிரம் என எடுக்கப்பட்டதாக சேகர் செல்போன் எண்ணிற்கு மெசேஜ் வந்தது.
    • திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர் ரெட்டி விசாரணை நடத்த சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் சேகர். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

    கடந்த வாரம் இவரது செல்போனிற்கு மெசேஜ் ஒன்று வந்தது. அதில் உங்களுடைய கூகுள் பே அக்கவுண்ட்டை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பினால் உங்கள் எண்ணிற்கு கமிஷன் தருவதாக கூறப்பட்டு இருந்தது.

    இதையடுத்து சேகர் தனது கூகுள் பே அக்கவுண்ட்டை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து மெசேஜ் வந்த எண்ணிற்கு அனுப்பினார். அதைத்தொடர்ந்து சேகர் கூகுள்பே எண்ணிற்கு ரூ.150 வந்தது.

    இதேபோல் சேகர் எண்ணிற்கு 3 எண்களில் இருந்து மெசேஜ் வந்தது. மெசேஜ் வந்த 3 எண்ணிற்கும் கூகுள் பே ஸ்கிரீன் ஷாட் அனுப்பினார்.

    ஸ்கிரீன் ஷாட் அனுப்பிய சிறிது நேரத்திலேயே சேகர் வங்கி கணக்கிலிருந்து ரூ.30 ஆயிரம், 63 ஆயிரத்து 900, 80 ஆயிரம், 90 ஆயிரம் என எடுக்கப்பட்டதாக சேகர் செல்போன் எண்ணிற்கு மெசேஜ் வந்தது. இதனைக் கண்டு அதிர்ந்து போன சேகர் இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர் ரெட்டி இதுகுறித்து விசாரணை நடத்த சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். சேகர் எண்ணிற்கு மெசேஜ் வந்த செல்போன் எண்களை ஆய்வு செய்தபோது மதுரையை சேர்ந்தவர்கள் சேகர் அக்கவுண்ட்டில் இருந்து பணம் எடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் மதுரைக்கு சென்று பண மோசடியில் ஈடுபட்ட மதுரை வாலிபர்கள் 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 2. 63 லட்சத்தை பறிமுதல் செய்து சேகரிடம் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×