என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்திய பட்ஜெட்- ரூ.3லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி கிடையாது- லைவ் அப்டேட்ஸ்

    • அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ம் தேதி வரை கூட்டத்தொடர் நடக்கிறது.
    • 2024- 25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    நடப்பு 2024- 25-ம் நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

    தேர்தல் முடிவடைந்து மத்தியில் 3-வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சியமைந்துள்ள நிலையில், இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டியது.

    இதற்காக பிரதமர் மோடி மற்றும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் கடந்த சில வாரங்களாக பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து வந்தனர்.

    அதன்படி 2024- 25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடக்கிறது.

    இதன் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெற்றது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    பிரதமர் மோடியின் 3-வது ஆட்சிக்காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

    Live Updates

    • 23 July 2024 11:23 AM IST

      நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு MSP உறுதி செய்யப்பட்டது.

    • 23 July 2024 11:23 AM IST

      கிசான் கிரெடிட் கார்ட் 5 மாநிலங்களில் முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்படும்.

    • 23 July 2024 11:23 AM IST

      மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு- நிர்மலா சீதாராமன்

    • 23 July 2024 11:19 AM IST

      அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 1 கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்கு தயார் செய்வோம்...

    • 23 July 2024 11:17 AM IST

      பருவநிலையை தாக்குப்பிடித்து வளரும் 102 வகையான புதிய பயிர்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது- நிர்மலா சீதாராமன்

    • 23 July 2024 11:15 AM IST

      வேளாண் உற்பத்தியை அதிகரிக்க அரசு கவனம் செலுத்த உள்ளது- நிதியமைச்சர்

    • 23 July 2024 11:15 AM IST

      வேலை வாய்ப்புகளை பெருக்க 9 வகையான முன்னுரிமைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது- நிர்மலா சீதாராமன்

    • 23 July 2024 11:13 AM IST

      பிரதமரின் இலவச உணவு வழங்கும் கரீப் கல்யாண் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    • 23 July 2024 11:13 AM IST

      இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடுகளை அளிக்க ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் 4 கோடி பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டம்.


    • 23 July 2024 11:12 AM IST

      இந்தியாவின் பொருள் விநியோகம் சங்கிலி மிகவும் வலுவான நிலையில் உள்ளது.

    Next Story
    ×