என் மலர்
இந்தியா
மத்திய பட்ஜெட்- ரூ.3லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி கிடையாது- லைவ் அப்டேட்ஸ்
- அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ம் தேதி வரை கூட்டத்தொடர் நடக்கிறது.
- 2024- 25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
நடப்பு 2024- 25-ம் நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
தேர்தல் முடிவடைந்து மத்தியில் 3-வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சியமைந்துள்ள நிலையில், இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டியது.
இதற்காக பிரதமர் மோடி மற்றும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் கடந்த சில வாரங்களாக பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து வந்தனர்.
அதன்படி 2024- 25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடக்கிறது.
இதன் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெற்றது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பிரதமர் மோடியின் 3-வது ஆட்சிக்காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
Live Updates
- 23 July 2024 11:34 AM IST
பெண்கள், பெண் குழந்தைகள் பயன்பெறும் திட்டங்களுக்காக ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு
- 23 July 2024 11:33 AM IST
முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் நிதி ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரிப்பு- நிர்மலா சீதாராமன்
- 23 July 2024 11:30 AM IST
ஆந்திராவிற்கு சிறப்பு நிதி உதவியாக ரூ.15 ஆயிரம் கோடி வழங்கப்பட உள்ளது- நிர்மலா சீதாராமன்
- 23 July 2024 11:29 AM IST
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 3 கோடி புதிய இலவச வீடுகள் கட்டப்படும் - நிர்மலா சீதாராமன்
- 23 July 2024 11:27 AM IST
நாடு முழுவதும் பணிபுரியும் பெண்களுக்காக ஹாஸ்டல் மற்றும் தங்குமிடங்கள் அமைக்கப்படும்.
- 23 July 2024 11:27 AM IST
ஆந்திராவை பிரிக்கும் போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்- நிர்மலா சீதாராமன்
- 23 July 2024 11:25 AM IST
பீகாரில் புதிய விமான நிலையம், சாலைகள் அமைக்கப்படும். கயாவில் புதிய தொழில்வழித்தடம் அமைக்கப்படும்.











