என் மலர்

  இந்தியா

  டெல்லியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கைது
  X

  டெல்லியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் மகளிர் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.
  • டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர்.

  நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குகள், கைமாற்றப்பட்டதில் சட்ட விரோத பணிபரிமாற்றம் நடந்ததாக குற்றம் சட்டப் பட்டது. இது தொடர்பாக காங் கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது.

  இதில் விசாரணைக்கு ஆஜராக இருவருக்கும் அமலாக்கத் துறை சமீபத்தில் சம்மன் அனுப்பியது.

  இதையடுத்து நேற்று முன் தினம் ராகுல்காந்தி டெல்லி யில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் 10 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று 2-வது நாளாக அவரிடம் 11 மணிநேரம் விசாரணை நடந்தது. இன்றும் விசாரணைக்கு ஆஜராகுமாறு ராகுல்காந்தி யிடம் அதிகாரிகள் தெரிவித் தனர்.

  நேற்று விசாரணை முடிந்து இரவு 11.30 மணிக்கு அமலாக்கத்துறை அலுவல கத்தில் இருந்து வெளியே வந்த ராகுல்காந்தி தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன், கங்காராம் ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டுள்ள தாய் சோனியா காந்தியை சந்திக்க சென்றார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி கடந்த 12-ந்தேதி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

  இன்று 3-வது நாளாக ராகுல்காந்தி அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசா ரணைக்கு ஆஜரானார்.

  அவர் காலை 11.35 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வந்தார். ராகுல் காந்தியுடன் அவரது சகோதரி பிரியங்கா காந்தி உடன் சென்றார். பின்னர் ராகுல்காந்தி மட்டும் அமலாக்கத்துறை அலுவல கத்துக்குள் சென்றார். அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.

  ராகுல்காந்தியிடம் விசா ரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். முதல்நாள் விசாரணைக்கு ஆஜராக சென்ற ராகுல்காந்தியுடன் மூத்த தலைவர்கள் ஊர்வலம் சென்றனர்.

  அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட் டனர். நேற்றும் அமலாக்கத் துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

  3-வது நாளாக ராகுல்காந்தி விசாரணைக்கு ஆஜரான நிலையில் காங்கிரசார் இன்றும் போராட்டம் நடத்தினர்.ராகுல்காந்தியிடம் விசா ரணைக்கு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் மகளிர் அணியினர் போராட்டம் நடத்தினர். அவர்களும், தொண்டர்களும் போலீ சாரின் தடுப்புகளை மீறி அமலாக்கத்துறை அலுவலகத்தை முற்றுகை யிட சென்றனர்.

  உடனே போலீசார் மகளிரணியினர் காங்கிரஸ் தொண்டர்களை தடுத்தனர். இதனால் அங்கு தள்ளு-முள்ளு ஏற்பட்டது. சிலர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  தமிழகத்தை சேர்ந்த ஜோதிமணி எம்.பி. போலீசார் தடையை மீறி சென்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது அவர் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினார்.

  அதேபோல் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று அப்புறப்படுத்தினர். அவர்களை கைது செய்து பஸ்களில் ஏற்றி அழைத்து சென்றனர்.

  மேலும் அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு காங்கிரசார் போராட்டம் நடத்தினர். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

  காங்கிரசாரின் தொடர் போராட்டம் காரணமாக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தை சுற்றி சி.ஆர். பி.எப். படையினர், கலவர தடுப்பு போலீசார், டெல்லி போலீசார் குவிக்கப் பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

  Next Story
  ×