என் மலர்tooltip icon

    இந்தியா

    ராகுல் காந்தி பொதுக்கூட்ட மேடையில் பா.ஜனதா வேட்பாளர் படம்
    X

    ராகுல் காந்தி பொதுக்கூட்ட மேடையில் பா.ஜனதா வேட்பாளர் படம்

    • மத்திய இணை மந்திரியான பக்கன்சிங் குலாஸ்தே புகைப்படம் இடம் பெற்று இருந்தது.
    • பேனரின் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவியது.

    மத்திய பிரதேச மாநிலம் மண்டலா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஓம்கர்சிங்கை ஆதரிதது ராகுல்காந்தி இன்று பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார்.

    இந்த நிலையில் பொதுக்கூட்ட மேடையின் பின்புறத்தில் வைக்கப்பட்டு இருந்த கங்கிரஸ் தலைவர்களின் புகைப்படத்தில் மத்தியில் பா.ஜனதாவின் மண்டலா வேட்பாளரும், மத்திய இணை மந்திரியான பக்கன்சிங் குலாஸ்தே புகைப்படம் இடம் பெற்று இருந்தது. அந்த பேனரின் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவியது. இதையடுத்து தவறுதலாக அச்சடிக்கப்பட்ட பா.ஜனதா வேட்பாளரின் புகைப்படத்தை மறைத்து அதற்கு மேல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹர்வன்ஷ்சிங் புகைப்படம் ஒட்டப்பட்டது.

    Next Story
    ×