search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    விவசாய வேலைக்கு செல்லாததால் தகராறு: கணவன், மாமனார், மாமியார் கொலை
    X

    விவசாய வேலைக்கு செல்லாததால் தகராறு: கணவன், மாமனார், மாமியார் கொலை

    • மகளிடம் கணவர் தகராறு செய்வதை அறிந்த மாதுரியின் தந்தை மற்றும் சகோதரர் ஆத்திரமடைந்து கத்தியை எடுத்துக்கொண்டு நரேஷ் வீட்டிற்கு வந்தனர்.
    • வீட்டில் இருந்த நரேஷ், அவரது தந்தை சுப்பா ராவ், தாய் ஆதிலட்சுமி ஆகியோரை கத்தியால் சரமாரியாக வெட்டினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் பிடுகுரல்லா மண்டலம் கோணங்கியை சேர்ந்தவர் சாம்பசிவ ராவ் (வயது 63). இவரது மனைவி ஆதிலட்சுமி (60 ). இவர்களது மகன் நரேஷ் (30). நரேஷின் மனைவி மாதுரி. பட்டதாரி வாலிபரான நரேஷ் 15 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். மேலும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் நரேஷ் விவசாய நிலத்தில் வேலை செய்ய சென்றார். ஆனால் நரேஷின் மனைவி மாதுரி விவசாய நிலத்தில் வேலை செய்ய வரவில்லை. மாலை வீட்டிற்கு வந்த நரேஷ் மனைவியிடம் விவசாய பணிக்கு ஏன் வரவில்லை என கேட்டார். அப்போது மாதுரி தனக்கு வயிற்று வலி இருந்ததால் வேலைக்கு வரவில்லை என தெரிவித்தார்.

    இது சம்பந்தமாக கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து உள்ளூர் டாக்டர் ஒருவரை அழைத்து வந்து மாதுரிக்கு சிகிச்சை அளித்தார்.

    மீண்டும் இரவு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து மாதுரி தனது சகோதரர் சீனிவாச ராவ், தந்தை சுபா ராவ் ஆகியோருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். மகளிடம் கணவர் தகராறு செய்வதை அறிந்த மாதுரியின் தந்தை மற்றும் சகோதரர் ஆத்திரமடைந்து கத்தியை எடுத்துக்கொண்டு நரேஷ் வீட்டிற்கு வந்தனர்.

    அப்போது வீட்டில் இருந்த நரேஷ், அவரது தந்தை சுப்பா ராவ், தாய் ஆதிலட்சுமி ஆகியோரை கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் 3 பேரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.

    பின்னர் மாதுரி அவரது தந்தை சகோதரர் 3 பேரும் போலீசில் சரணடைந்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×