என் மலர்
இந்தியா

ஒரு கிலோ ஒரு லட்சம் அப்பு... ஜெய்ப்பூர் கடையில் அறிமுகமான புதுவிதமான இனிப்பு- வீடியோ
- இனிப்புக் கடையில் விலை உயர்ந்த இனிப்பு வகைகளும் விற்பனை செய்யப்படுகிறது.
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் தீபாவளிக்கு புதிய ஆடை அணிவதும், இனிப்புகள் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதும், பட்டாசு வெடிப்பதும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் பாரம்பரிய பழக்கமாக உள்ளது.
தீபாவளி தினத்தன்று பயன்படுத்தவும், உறவினர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கவும் இனிப்பு வகைகளை வாங்குவதும் அதிகரித்துள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களில் இனிப்பு வகைகள் செய்வது எப்படி என்பது அறிந்து இல்லங்களிலும் பெண்கள் இனிப்புகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு இனிப்புக் கடையில் தங்க சாம்பல் அல்லது 'ஸ்வர்ண பாஸ்மா' என்று அழைக்கப்படும் 24 காரட் உண்ணக்கூடிய தங்கத்தால் நிரப்பப்பட்ட 'ஸ்வர்ண பிரசாதம்' என்ற இனிப்பு வகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 'ஸ்வர்ண பிரசாதம்' இனிப்பு ஒரு கிலோ ரூ.1,11,000 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அந்த இனிப்புக் கடையில் விலை உயர்ந்த இனிப்பு வகைகளும் விற்பனை செய்யப்படுகிறது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.






