என் மலர்tooltip icon

    இந்தியா

    10 மசோதாக்களுக்கு ஒப்புதல்... கவர்னர் முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது... சுப்ரீம் கோர்ட் அதிரடி
    X

    10 மசோதாக்களுக்கு ஒப்புதல்... கவர்னர் முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது... சுப்ரீம் கோர்ட் அதிரடி

    • சட்டமன்றத்தால் மறுபரிசீலனை செய்யப்பட்ட மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.
    • தன்னிச்சையாக செயல்பட மாநில கவர்னர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

    டெல்லி:

    மசோதாக்களை கிடப்பில் போட்ட விவகாரம் தொடர்பாக கவர்னருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் இன்று தீர்ப்பை வாசித்தனர். தீர்ப்பில்

    அரசியலமைப்பு 200-ன் கீழ் கவர்னரின் முடிவு என்பது நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டதே என தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், சட்டமன்றத்தால் மறுபரிசீலனை செய்யப்பட்ட மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம். 10 மசோதாக்கள் மீது ஜனாதிபதி எடுக்கும் எந்த ஒரு எதிர் முடிவுகளும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

    10 மசோதாக்களை கிடப்பில் போட்ட கவர்னர் செயல்பாடு சரியானது அல்ல. அரசியல் சாசனத்தின் அடிப்படையிலேயே கவர்னர் முடிவெடுக்க வேண்டும். கவர்னர் மாநில சட்டமன்றத்தின் உதவி மற்றும் ஆலோசனையின் பேரில் செயல்பட வேண்டும்.

    தன்னிச்சையாக செயல்பட மாநில கவர்னர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என தெரிவித்த நீதிபதிகள் ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கியது. இதனால் ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பிய பல்கலைக்கழகங்கள் சட்டத்திருத்த மசோதா, டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களும் சட்டமாக நடைமுறைக்கு வந்துவிட்டன.

    இதனிடையே, மாநில அரசின் செயல்பாடுகளுக்கு கவர்னர் முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

    Next Story
    ×