என் மலர்tooltip icon

    இந்தியா

    மாநிலங்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்தத்தை ஆதரித்து பதிவான ஒற்றை ஓட்டு
    X

    மாநிலங்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்தத்தை ஆதரித்து பதிவான ஒற்றை ஓட்டு

    • மாநிலங்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து தி.மு.க. கூட்டணி மற்றும் அ.தி.மு.க. வாக்களித்தனர்.
    • பா.ம.க. வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

    வக்பு வாரிய திருத்த மசோதா மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே நேற்று நள்ளிரவில் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 128 உறுப்பினர்களும், எதிராக 95 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

    மாநிலங்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து தி.மு.க. கூட்டணி மற்றும் அ.தி.மு.க. வாக்களித்தனர்.

    பா.ம.க. வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. பா.ஜ.க.விற்கு தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் கிடையாது.

    மாநிலங்களவையில் தமிழகத்தில் இருந்து வக்பு வாரிய சட்டத்திருத்தத்தை ஆதரித்து ஒற்றை ஓட்டு பதிவானது. த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மட்டும் வக்பு வாரிய சட்டத்திருத்தத்தை ஆதரித்து வாக்களித்துள்ளார்.

    Next Story
    ×