என் மலர்tooltip icon

    இந்தியா

    அரசியலமைப்பை எரித்தவர்கள் ஆர்எஸ்எஸ்.. பாஜகவோடு சேர்ந்து அதை அழிக்க மீண்டும் சதி - காங்கிரஸ்
    X

    அரசியலமைப்பை எரித்தவர்கள் ஆர்எஸ்எஸ்.. பாஜகவோடு சேர்ந்து அதை அழிக்க மீண்டும் சதி - காங்கிரஸ்

    • அரசியலமைப்பை மாற்ற நாடாளுமன்றத்தில் 400க்கும் மேற்பட்ட இடங்கள் தேவை என்று பாஜக தலைவர்கள் பேசினர்.
    • இறுதியாக, பொதுமக்கள் அவர்களுக்கு ஒரு பாடம் கற்பித்தனர்.

    அரசியலமைப்பு முகப்புரையில் இருந்து 'சோசலிஸ்ட்', 'மதச்சார்பற்ற' (socialist and secular) என்ற வார்த்தைகளை நீக்க ஆர்.எஸ்.எஸ்.பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஆர்எஸ்எஸ்-பாஜகவின் சிந்தனை அரசியலமைப்புக்கு எதிரானது. ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே அரசியலமைப்பின் முகவுரையில் மாற்றம் கோரியுள்ளார்.

    இது பாபா சாஹேப் அம்பேதகரின் அரசியலமைப்பை அழிக்கும் சதி, இதை ஆர்எஸ்எஸ்-பாஜக எப்போதிருந்தோ திட்டம் தீட்டி வருகிறது.

    அரசியலமைப்பு செயல்படுத்தப்பட்டபோது, ஆர்எஸ்எஸ் அதை எதிர்த்தது, அரசியலமைப்பை எரித்தது.

    அரசியலமைப்பை மாற்ற நாடாளுமன்றத்தில் 400க்கும் மேற்பட்ட இடங்கள் தேவை என்று பாஜக தலைவர்கள் கடந்த மக்களவைத் தேர்தலின்போது வெளிப்படையாகக் கூறினர். இறுதியாக, பொதுமக்கள் அவர்களுக்கு ஒரு பாடம் கற்பித்தனர்.

    இப்போது மீண்டும் ஒருமுறை அவர்கள் தங்கள் சதிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் காங்கிரஸ் எந்த விலை கொடுத்தும் அவர்களின் நோக்கங்கள் வெற்றிபெற விடாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×