என் மலர்
இந்தியா

ரூ. 512 கோடி GST வரி மோசடி.. ம.பி.யில் சிக்கிய நெட்வொர்க் - மாஸ்டர் மைண்ட் கைது
- 23க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை உருவாக்கினார்.
- 150க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இந்த மோசடி நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் ரூ. 512 கோடி மதிப்புள்ள போலி ஜி.எஸ்.டி. பில் ம மோசடியை பொருளாதார குற்றப்பிரிவு (EOW) கண்டறிந்துள்ளது. இந்த மோசடியின் முக்கிய குற்றவாளியான வினோத் சஹாய், ராஞ்சியில் கைது செய்யப்பட்டார்.
வினோத் சஹாய், 23க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை உருவாக்கி, போலி ஜி.எஸ்.டி. பில்கள் மூலம் வரி சலுகைகளை தவறாகப் பெற்றுள்ளார். இந்த நிறுவனங்கள் காகித அளவிலேயே இயங்கி வந்துள்ளன. 150க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இந்த மோசடி நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளதாக EOW தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சஹாயிடமிருந்து போலியான ஆவணங்கள், ஜி.எஸ்.டி. பில் புத்தகங்கள், ஆதார், பான் கார்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த மோசடி ஜபல்பூர், நாக்பூர், பிலாஸ்பூர், கோர்பா, ராஞ்சி ஆகிய நகரங்களில் நிகழ்ந்துள்ளது. இதன் பின்னால் இன்னும் மிகப்பெரிய மோசடி மறைந்துள்ளது என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.