என் மலர்
இந்தியா

முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை - வெளியாகும் முக்கிய அறிவிப்பு?
- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து கடந்த 36 மணி நேரத்தில் எல்லையில் நிலைமை மோசமடைந்துள்ளது.
- நேற்றிரவு நடந்த தாக்குதல், இந்தியாவின் பதிலடி உள்ளிட்டவை குறித்து ராஜ்நாத் சிங்கிடம் முப்படை அதிகாரிகள் விளக்கி வருகின்றனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத நிலைகளை குறிவைத்து இந்திய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தின.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து கடந்த 36 மணி நேரத்தில் எல்லையில் நிலைமை மோசமடைந்துள்ளது. பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் பதற்றமாக சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் டெல்லியில் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார்.
நேற்றிரவு நடந்த தாக்குதல், இந்தியாவின் பதிலடி உள்ளிட்டவை குறித்து ராஜ்நாத் சிங்கிடம் முப்படை அதிகாரிகள் விளக்கி வருகின்றனர்.
அடுத்தகட்ட நகர்வு குறித்து முப்படை தளபதிகள், பாதுகாப்புத்துறை செயலாளர்களுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார். இதையடுத்து முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளது.






