search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லி புறப்பட்ட ராகுல் காந்தி.. நடுவழியில் திரும்பிய விமானம்.. அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?
    X

    டெல்லி புறப்பட்ட ராகுல் காந்தி.. நடுவழியில் திரும்பிய விமானம்.. அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?

    • மத்திய பா.ஜ.க. அரசை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார்.
    • விமானத்தை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி நேற்று விமானம் மூலம் நாக்பூரில் இருந்து டெல்லி புறப்பட்டார். எனினும், டெல்லி செல்லாத விமானம் பாதி வழியில் திருப்பி அனுப்பப்பட்டது. டெல்லி செல்லும் வழியில் கடுமையான பனி காரணமாக வெளிச்சமின்மை ஏற்பட்டதால், விமானத்தை டெல்லி நோக்கி இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக டெல்லி செல்ல வேண்டிய விமானம் ஜெய்ப்பூரில் தரையிறங்கியது. கடந்த சில நாட்களாக டெல்லியில் கடுமையன பனிப் பொழிவு பதிவாகி வருகிறது. இதன் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக விமான சேவை பாதிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கிட்டத்தட்ட 60 விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாட்டின் மிகப் பெரிய விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து தினமும் 1300 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

    காங்கிரஸ் கட்சியின் 139-ம் ஆண்டு துவக்க விழா தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ராகுல் காந்தி நாக்பூர் வந்திருந்தார். இது தொடர்பான கூட்டத்தில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, மத்திய பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சித்திருந்தார்.

    Next Story
    ×