என் மலர்tooltip icon

    இந்தியா

    நாளை ஜம்மு- காஷ்மீர் செல்கிறார் ராகுல்காந்தி: பாக்., தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கிறார்
    X

    நாளை ஜம்மு- காஷ்மீர் செல்கிறார் ராகுல்காந்தி: பாக்., தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கிறார்

    • பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் தாக்குதல் நடத்தியதில் ஜம்மு-காஷ்மீரில் 27 பேர் உயிரிழந்தனர்.
    • பகல்காம் தாக்குதலுக்கு பிறகு ராகுல்காந்தி 2-வது முறையாக ஜம்மு-காஷ்மீருக்கு செல்ல உள்ளார்.

    காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா-பாகிஸ்தான் ராணுவங்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

    இதில் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் தாக்குதல் நடத்தியதில் ஜம்மு-காஷ்மீரில் 27 பேர் உயிரிழந்தனர்.70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இந்த நிலையில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல்காந்தி நாளை ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்துக்கு செல்கிறார்.

    அங்கு பாகிஸ்தானின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்கிறார். பகல்காம் தாக்குதலுக்கு பிறகு ராகுல்காந்தி 2-வது முறையாக ஜம்மு-காஷ்மீருக்கு செல்ல உள்ளார்.

    அவர் கடந்த ஏப்ரல் 25-ந்தேதி ஸ்ரீநகருக்குச் சென்று பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்தவர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×