search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    10 கோடிக்கும் அதிகமான பெண்கள் சுயமாக தொழில் செய்து வருகின்றனர்: ஜனாதிபதி
    X

    10 கோடிக்கும் அதிகமான பெண்கள் சுயமாக தொழில் செய்து வருகின்றனர்: ஜனாதிபதி

    • உலகிலேயே செல்போன் தயாரிப்பில் முன்னணி நாடாக இந்தியா திகழ்கிறது.
    • 10 ஆண்டுகளுக்கு முன்பு இரட்டை இலக்கத்தில் இருந்த விலைவாசி உயர்வு, தற்போது ஒற்றை இலக்கத்தில் உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:

    * நாட்டின் மாதாந்திர சராசரி ஜி.எஸ்.டி. வரி வருவாய் ரூ.1.40 லட்சம் கோடியை கடந்துள்ளது.

    * ஜி.எஸ்.டி. வரி மூலம் ஒரே நாடு, ஒரே வரி சட்டம் கிடைத்தது.

    * இன்று நமது அந்நிய செலவாணி கையிருப்பு 600 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

    * உலகிலேயே செல்போன் தயாரிப்பில் முன்னணி நாடாக இந்தியா திகழ்கிறது.

    * இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி ஒரு லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

    * உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் பாதுகாப்பு காரிடார் பணிகள் நடைபெற்று வருகிறது.

    * விண்வெளி துறையில் புதிய நிறுவனங்கள் கால் பதிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    * நல்ல நிர்வாகத்தை வழங்குவதே முன்னுரிமையாக உள்ளது.

    * அந்நிய நேரடி முதலீடு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

    * நல்ல நிர்வாகத்தை வழங்குவதே முன்னுரிமையாக உள்ளது.

    * பல்வேறு சீர்திருத்தங்கள் மூலம், சிறுகுறு, நடுத்தர தொழில் துறையில் மிகப்பெரும் பலன்கள் கிடைத்துள்ளது.

    * டிஜிட்டல் மேலாண்மை துறையில் மத்திய அரசு மிகப்பெரிய சீர்திருத்தத்தை மேற்கொண்டது.

    * காலனி ஆதிக்க குற்ற நடைமுறை சட்டங்கள் ஒழிக்கப்பட்டுள்ளது.

    * இன்று பிற நாடுகளிலும் இந்திய அரசு யுபிஐ பண பரிவர்த்தனை வசதியை வழங்கிக் கொண்டிருக்கிறது.

    * கடந்த சில ஆண்டுகளில் நாடு, மிகச்சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி உள்ளது.

    * 4 லட்சம் கி.மீ.க்கும் அதிகமாக புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    * நாடு முழுவதும் அதிவேகமாக செல்லக்கூடிய வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    * தேசிய நெடுஞ்சாலைகளின் தூரம் இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது.

    * நாட்டில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

    * 4 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.

    * வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்திற்கு 4 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.

    * உஜ்வாலா திட்டத்தின் மூலம் எண்ணற்ற குடும்பங்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    * எந்த ஒரு பயனாளியும் விடுபடாமல் அரசின் பயன்கள் சென்றடைய வேண்டும் என்பதே அரசின் இலக்கு.

    * 10 ஆண்டுகளுக்கு முன்பு இரட்டை இலக்கத்தில் இருந்த விலைவாசி உயர்வு, தற்போது ஒற்றை இலக்கத்தில் உள்ளது.

    * ரூ.2.5 லட்சத்தில் இருந்த தனிநபர் வருமான வரி விலக்கு, தற்போது ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    * பிரதமர் மக்கள் மருந்தகத்தின் மூலம், கேன்சர் உள்ளிட்ட நோய்களுக்கும் குறைந்த விலையில் மருந்து விற்பனை செய்யப்படுகிறது.

    * ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    * உதான் திட்டத்தின் மூலம் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு குறைந்த விலையில் விமான டிக்கெட்.

    * 10 கோடிக்கும் அதிகமான பெண்கள் சுயமாக தொழில் செய்து வருகின்றனர் என்று கூறினார்.

    Next Story
    ×