என் மலர்
இந்தியா

VIDEO: ஐதராபாத்தில் 1,297 பைக்குகளின் சைலன்சர்களை ரோடு ரோலர் ஏற்றி அழித்த காவல்துறை
- சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட 1297 பைக்குகளின் சைலன்சர்களை போலீசார் பறிமுதல்
- இது தொடர்பாக 2,325 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
VIDEO:அண்மை காலங்களில் இளைஞர்கள் பலர் தங்களின் பைக்குகளில் உள்ள சைலன்சர்களை கழற்றிவிட்டு அதிக புகை மற்றும் ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர்களை பொருத்தி வருகின்றனர். இதனால் ஒலி மற்றும் காற்று மாசு அதிகரித்து வருகிறது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட 1297 பைக்குகளின் சைலன்சர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2,325 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட 1,297 பைக்குகளின் சைலன்சர்கள் ரோடு ரோலர் ஏற்றி காவல்துறை அழித்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story






