என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒரே உலகத்தலைவர்... இன்ஸ்டாகிராமை தொடர்ந்து யூடியூபில் சாதனை படைத்த பிரதமர் மோடி
    X

    ஒரே உலகத்தலைவர்... இன்ஸ்டாகிராமை தொடர்ந்து யூடியூபில் சாதனை படைத்த பிரதமர் மோடி

    • பிரதமர் மோடி, கடந்த 2007-ம் ஆண்டு தன் யூடியூப் கணக்கை தொடங்கினார்.
    • பிரதமர் மோடியை பின்தொடர்பவர்களில் இந்தியர்களே அதிகம்.

    தற்போதைய தொழில்நுட்ப உலகில், மக்களின் அன்றாட வாழ்வில் சமூக வலைதளங்கள் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இன்ஸ்டாகிராம். பேஸ்புக், எக்ஸ் சமூக வலைதளங்களை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில், சமூக வலைதளமான யூடியூப் தற்போது மிகவும் பிரபலமாக உள்ளது. யூடியூப் பயனர்கள் வீடி யோக்கள் மூலம் கருத்துகளை தெரிவிக்க அனுமதிக்கும் உலகின் முன்னணி வீடியோ சமூக வலைதளமாகும்.

    பிரதமர் மோடி, யூடியூபில் 3 கோடி பின்தொடர்பவர்களை பெற்றிருக்கிறார். இதன் மூலம். யூடியூபில் உலகளவில் அதிக பின்தொடர்பவர்களை கொண்டுள்ள அரசியல் தலைவர் என்ற பெருமையை பெற்று உள்ளார்.

    இந்த வரிசையில் 2-வது இடத்தில் பிரேசில் முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சனாரோ 66 லட்சம் பின்தொடர்பவர்களையும், 3-வது இடத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 40 லட்சம் பின்தொடர்பவர்களையும் கொண்டு உள்ளனர்.

    பிரதமர் மோடி, கடந்த 2007-ம் ஆண்டு தன் யூடியூப் கணக்கை தொடங்கினார். இதுவரை 33 ஆயிரத்து 823 வீடியோக்கள் பதிவிட்டுள்ள அவர் 800 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளார். பிரதமர் மோடியை பின்தொடர்பவர்களில் இந்தியர்களே அதிகம்.

    பிரதமர் மோடி, கடந்த 2007-ம் ஆண்டு தன் யூடியூப் கணக்கை தொடங்கினார். இதுவரை 33 ஆயிரத்து 823 வீடியோக்கள் பதிவிட்டுள்ள அவர் 800 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளார். பிரதமர் மோடியை பின்தொடர்பவர்களில் இந்தியர்களே அதிகம்.

    முன்னதாக கடந்த மாதம் 26-ந்தேதி தான் இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்வோரை பெற்றிருந்தார் பிரதமர் மோடி. இன்ஸ்டாகிராமில் சர்வதேச அரசியல் தலைவர்களில் அதிகம் பேர் பின்தொடரும் தலைவர் என்ற பெருமையை இதன் மூலம் பிரதமர் மோடி பெற்றிருந்தார். இதைத் தொடர்ந்து நேற்று யூடியூபில் எந்தவொரு அரசியல் தலைவரும் தொடாத ஒரு உச்சத்தை அவர் தொட்டுள்ளார்.

    பிரதமர் மோடியின் உரைகள், வெளிநாட்டு பயணங்கள் மற்றும் மனதின் குரல் போன்ற நிகழ்ச்சிகள் அவரது யூடியூப் சேனல் மூலம் உலகம் முழு வதும் உள்ள மக்களிடம் நேரடியாக சென்றடைவது இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

    Next Story
    ×