search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தேர்தல் நேரத்தில் தான்  கிராமம், ஏழை விவசாயிகள் என காங்கிரசுக்கு நினைவில் வரும் - பிரதமர் மோடி
    X

    தேர்தல் நேரத்தில் தான் கிராமம், ஏழை விவசாயிகள் என காங்கிரசுக்கு நினைவில் வரும் - பிரதமர் மோடி

    • பழங்குடியினரின் ஆரோக்கியத்திற்காக பல திட்டங்கள் தொடங்கினோம்.
    • கொள்ளையடித்து பிளவுபடுத்து' என்பதே காங்கிரஸ் கட்சியின் குறிக்கோள்.

    மத்தியபிரதேச மாநிலம் ஜபுவா மாவட்டத்தில் பழங்குடியின சமூக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    "பாராளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் இந்தஆண்டு மாநிலத்திற்கு நான் வருவது இதுவே முதல் முறை. பழங்குடியினரின் ஆரோக்கியத்திற்காக பல திட்டங்கள் தொடங்கினோம்."

    "காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் நேரத்தில்தான் கிராமங்கள், ஏழைகள், விவசாயிகள் நினைவுக்கு வருகிறது. தங்களின் உடனடி தோல்வியை உணர்ந்து, காங்கிரசும் அதன் கூட்டணிக்கட்சிகளும் கடைசி கட்ட தந்திரங்களை கையாண்டு வருகின்றன."


    "'கொள்ளையடித்து பிளவுபடுத்து' என்பதே காங்கிரஸ் கட்சியின் குறிக்கோள். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட இப்போது ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 400 இடங்கள் தேர்தலில் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்."

    "பாராளுமன்ற தேர்தலில் பாஜவின் 'தாமரை' சின்னம் 370க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றுவது உறுதி. நான் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக இதை சொல்ல வில்லை. உங்கள் சேவகனாக நான் சொல்ல இங்கு வந்து உள்ளேன்."

    "மத்திய பிரதேசத்தில் எங்களின் இரட்டை என்ஜின் அரசு இரட்டிப்பு வேகத்தில் செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க. 370 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றிபெற, கடந்த தேர்தலைவிட ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 370 வாக்குகள் கூடுதலாகபெறுவதை வாக்காளர்கள் உறுதி செய்ய வேண்டும்," என்று பேசினார்.

    Next Story
    ×