search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    2014 வெறும் தேதியல்ல, மாற்றம்: காங்கிரஸ் ஆட்சி காலாவதியான போன்- பிரதமர் மோடி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    "2014" வெறும் தேதியல்ல, மாற்றம்: காங்கிரஸ் ஆட்சி காலாவதியான போன்- பிரதமர் மோடி

    • ரீஸ்டார்ட் அல்லது பேட்டரியை சார்ஜ் செய்வது அல்லது பேட்டரியை மாற்றினாலும் கூட வேலை செய்யவில்லை
    • மொபைல் பிராட்பேண்ட் வேகத்தில் இந்தியா முன்னதாக 118-வது இடத்தில் இருந்தது. தற்போது 43-வது இடம்

    2004 மற்றும் 2009-ல் நடைபெற்ற மக்களவை தேர்தல்களில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அடுத்தடுத்து வெற்றி பெற்று மன்மோகன் சிங் பிரதமரானார்.

    2014-ல் தேர்தலில் பா.ஜனதா மோடியை முன்னிறுத்தி "குஜராத் மாடல்" முழக்கத்துடன் மக்களை சந்தித்தது. இந்த தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தொடர்ந்து 2019 தேர்தலில் தனிப்பெரும்பான்மைக்கான இடங்களை பிடித்தது. அடுத்த வருடம் நடைபெற இருக்கும் தேர்தலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் "2014" வெறும் தேதி மட்டுமல்ல. அது மாற்றம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி கூறியதாவது:-

    "2014" வெறும் தேதியல்ல. இது மாற்றம். காங்கிரஸ் கட்சி காலாவதியான போனாக (செல்போன்) இருந்தது. எத்தனை முறை ஸ்வைப் செய்தாலும் அல்லது பட்டனை அழுத்தினாலும், செயல்படாத உடைந்த ஸ்கிரீனை கொண்ட கலாவதியான போன் போன்று காங்கிரஸ் ஆட்சி இருந்தது.

    ரீஸ்டார்ட் அல்லது பேட்டரியை சார்ஜ் செய்வது அல்லது பேட்டரியை மாற்றினாலும் கூட வேலை செய்யவில்லை. 2014-ல் மக்கள் காலாவதியான போன் போன்ற அரசாங்கத்தை புறந்தள்ளி, நாட்டை ஆள்வதற்கு எங்களுக்கு வாய்ப்பு அளித்தனர்.

    5ஜி நெட்வொர்க் அறிமுகப்படுத்திய பிறகு, 6ஜி-யில் இந்தியா தன்னை முன்னோடியாக நிலை நிறுத்துவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா தயாரிக்கும் போன்களை உலகம் பயன்படுத்தி வருகிறது.

    மொபைல் பிராட்பேண்ட் வேகத்தில் இந்தியா முன்னதாக 118-வது இடத்தில் இருந்தது. தற்போது 43-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 5ஜி அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வருடத்திற்குள் நான்கு லட்சம் 5ஜி பேஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    Next Story
    ×