என் மலர்
இந்தியா

மணிப்பூரை தொடர்ந்து தவிர்த்து வரும் பிரதமர் மோடி: காங்கிரஸ் விமர்சனம்
- மணிப்பூரில் இரட்டை எஞ்ஜின் அரசு என்று அழைக்கப்படும் ரெயில் தானாகவே தடம் புரண்டது.
- அரசியலமைப்பு இயந்திரங்கள் முற்றிலும் செயலிழந்துவிட்டதாக உச்சநீதிமன்றம் அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மணிப்பூரில் கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் தேதி மெய்தி- குகி ஆகிய இரண்டு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு பின்னர் வன்முறையாக வெடித்தது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வன்முறை தொடங்கிய 2-ஆம் ஆண்டு இன்று அனுசரிக்கப்படுகிறது. குகி சமூகத்தின் மாணவர் அமைப்புகள் பெரும்பாலான இடங்களில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
இந்த நிலையில் மணிப்பூரை பிரதமர் மோடி தொடர்ந்து தவிர்த்து வருகிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மிகப்பெரிய தோல்வி என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-
மணிப்பூரில் 2023ஆம் ஆண்டு மே 3 ஆம் தேதி வன்முறை தொடங்கியது. மாநிலத்தில் இரட்டை எஞ்ஜின் அரசு என்று அழைக்கப்படும் ரெயில் தானாகவே தடம் புரண்டது. மூன்று மாதங்களுக்குப் பிறகு, மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரங்கள் முற்றிலும் செயலிழந்துவிட்டதாக உச்சநீதிமன்றம் அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மணிப்பூரின் வேதனையும் துன்பமும் தொடர்கிறது. அரசியல் விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன. எந்தவொரு பயனுள்ள நல்லிணக்க செயல்முறையும் நடைபெறவில்லை. 60 ஆயித்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் சொந்த மாநிலங்களிலேயே தங்களது வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்து மிகுந்த மன அழுத்த சூழ்நிலையில் நிவாரண முகாம்களில் தொடர்ந்து தங்கி வசிதித்து வருகின்றனர்.
மிக முக்கியமாக, பிரதமர் மணிப்பூரைத் தொடர்ந்து தவிர்த்து வருகிறார். அவர் மாநிலத்தைச் சேர்ந்த யாரையும் சந்திக்கவில்லை. உலகம் முழுவதும் பயணம் செய்துள்ளார். ஆனால் பதற்றமான மாநிலத்தைப் பார்வையிட்டு அங்குள்ள மக்களைச் சென்றடைய நேரமோ, ஆர்வமோ இல்லை. மணிப்பூர் சூழ்நிலையை நிர்வகிப்பதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தோல்வியடைந்துவிட்டார்.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.