2 முறை நீட் தேர்ச்சி.. ஆனாலும் சீட் மறுப்பு - உச்சநீதிமன்றத்தில் வாதாடி வென்ற 19 வயது மாணவன்!

அதர்வா தானே ஆஜராகி தனது வாதங்களை முன்வைத்தார்.உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தினர்.
2 முறை நீட் தேர்ச்சி.. ஆனாலும் சீட் மறுப்பு - உச்சநீதிமன்றத்தில் வாதாடி வென்ற 19 வயது மாணவன்!
Published on

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்தவர் 19 வயது இளைஞர் அதர்வா சதுர்வேதி.

பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான EWS கோட்டாவின் கீழ் இரண்டு முறை இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வில் அதர்வா தேர்ச்சி பெற்றார். இரண்டாவது முறை 530 / 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 

ஆனால் மத்தியப் பிரதேச அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் EWS இடஒதுக்கீட்டை அமல்படுத்தாததால் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அதர்வா வழக்கு தொடர்ந்தார். ஆனால் அங்கு நீதி கிடைக்காததால், உச்ச நீதிமன்றத்தை நாடினார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. ஆன்லைன் வாயிலாக அதர்வா தானே ஆஜராகி தனது வாதங்களை முன்வைத்தார்.

மாணவனின் வாதத்தைக் ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அவருக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தனர்.

உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஒரு வார காலத்திற்குள் அதர்வாவிற்கு 2025-26 கல்வியாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் தற்காலிக சேர்க்கை வழங்க தேசிய மருத்துவ ஆணையத்திற்கும் மாநில அரசிற்கும் உத்தரவிடப்பட்டது.

தனியார் கல்லூரிகள் இடஒதுக்கீடு முறையைப் பின்பற்றவில்லை என்றால், அவற்றைப் பூட்டிவிடுங்கள் என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் காட்டமாக தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com