என் மலர்
இந்தியா

நமது சண்டை பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிரானதல்ல, பயங்கரவாதிகளுக்கு எதிரானது- ஏ.கே.பார்தி
- பாகிஸ்தானின் நூர்கான் விமானப்படை தளம் தாக்கி அழிக்கப்பட்ட காட்சி வெளியிட்டு இயக்குனர் ஜெனரல் ராஜீவ் காய் விளக்கம்.
- பாகிஸ்தான் ஏவிய சீனாவின் பிஎல் 15 ரக ஏவுகணைகளையும் இடைமறித்து அழித்துள்ளோம்.
இந்தியா- பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில், முப்பபை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது, ஏர் மார்ஷல் பார்தி, வைஸ் அட்மிரல் பிரமோத், லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் விளக்கம் அளித்தனர்.
பாகிஸ்தானின் நூர்கான் விமானப்படை தளம் தாக்கி அழிக்கப்பட்ட காட்சி வெளியிட்டு இயக்குனர் ஜெனரல் ராஜீவ் காய் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பு மூலமாக பாகிஸ்தானின் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக ராஜீவ் காய் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்,"பயங்கரவாதிகள் பிரச்சனையை பாகிஸ்தான் ராணுவம் தனது பிரச்சனையாக கருதுகிறது" என்றார்.
பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தவில்லை, பயங்கரவாதிகளை தான் குறிவைத்தது என்று ஏ.கே. பார்தி கூறியுள்ளார்.
மேலும் அவர்," நமது சண்டை பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிரானதல்ல, பயங்கரவாதிகளுக்கு எதிரானது.
பாகிஸ்தான் ஏவிய சீனாவின் பிஎல் 15 ரக ஏவுகணைகளையும் இடைமறித்து அழித்துள்ளோம்" என்றார்.
3 மணி நேரத்தில் பாகிஸ்தானின் 11 விமானப்படை தளங்கள் மீது அதிரடியாக இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தானின் 11 விமானப்படை தளங்களையும் மே 9ம் தேதி இரவு தாக்குதல் நடத்தி தகர்த்ததாக இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
பாகிஸ்தானின் நூர்கான், ரபீக்கி, முரிட்கே, சக்கர், சியால்கோட், பஸ்ரூட், சர்கோடா உள்ளிட்ட தளங்கள் தகர்க்கப்பட்டன.
பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் தகர்க்கப்பட்டது தொடர்பான புகைப்பட ஆதாரங்கள் வெளியிட்டு இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
பயங்கரவாதிகளின் நிலைகள்தான் நமது இலக்கு. ஆனால், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் நம் மீது தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் ராணுவம் ஏவிய டிரோன்கள் அனைத்தையும் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு அழித்தொழித்தது.
இந்திய ராணுவத்தின் ஆகாஷ் வான் பாதுகாப்பு தளவாடம் பாகிஸ்தான் டிரோன்கள் அழிப்பில் முக்கிய பங்காற்றியதாக ஏ.கே.பாரதி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் விமானப்படை தளம் உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்ட சேதங்களுக்கு பாகிஸ்தான் மட்டுமே பொறுப்பு. எல்லையை பாதுகாக்கும் பணியில் இந்திய ராணுவம் அனைத்து வகையிலும் உறுதி பூண்டிருந்தது" என்றார்.






