என் மலர்
இந்தியா

குஜராத்தில் பிரதமர் மோடியை வரவேற்க வைக்கப்பட்டுள்ள 'ஆபரேஷன் சிந்தூர்' விளம்பர பதாகைகள்
- ரெயில் என்ஜின் உற்பத்தி ஆலையை திறந்து வைக்க பிரதமர் மோடி குஜராத்தை வருகிறார்.
- பூஜ் நகரில் ரூ.53,414 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்.
குஜராத்தின் டஹோட் நகரில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ரெயில் என்ஜின் உற்பத்தி ஆலையை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
மேலும், பூஜ் நகரில் ரூ.53,414 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்.
இந்நிலையில், அகமதாபாத் வரும் பிரதமர் மோடியை வரவேற்க வழிநெடுக பிரதமரின் புகைப்படத்துடன் 'ஆபரேஷன் சிந்தூர்' விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தனது அரசியல் ஆதாயத்திற்காக பாஜக பயன்படுத்துகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story






