என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா (National)
ஆபாச வீடியோ விவகாரம்: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
- தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் 3000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது
- பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் கர்நாடகாவில் முதல் கட்டமாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.
இந்த பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. .
இந்நிலையில் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் 3000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.
இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனிக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெர்மனி தப்பிச் சென்ற அவர் நாடு திரும்பியதும் கைது செய்ய போலீஸ் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்துள்ளது.
இதனையடுத்து பிரிஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆகியோருக்கு சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பியது.
இந்நிலையில் சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
ரேவண்ணா நேரில் ஆஜராகவில்லை என்றால் அவர் கைது செய்யப்படுவார் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா எச்சரித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ரேவண்ணா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "விசாரணையில் கலந்து கொள்ள நான் பெங்களூரில் இல்லாததால், எனது வழக்கறிஞர் மூலம் பெங்களூரு சிஐடிக்கு தகவல் தெரிவித்தேன். உண்மை விரைவில் வெல்லும்" என்று பதிவிட்டுள்ளார்.
வெளிநாட்டில் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக பிரஜ்வல் ரேவண்ணா ஒரு வாரம் அவகாசம் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்