search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆதரவு இருந்தாலும் ஆட்சியமைக்க அழைக்க மாட்டீங்களா? ஆளுநருக்கு காங்கிரஸ் கண்டனம்
    X

    ஆதரவு இருந்தாலும் ஆட்சியமைக்க அழைக்க மாட்டீங்களா? ஆளுநருக்கு காங்கிரஸ் கண்டனம்

    • சவப்பெட்டியில் ஆணி அடிப்பது போன்று இருக்கிறது.
    • அரசியலமைப்பை அவமதிப்பதற்கு சமம்.

    ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்க சம்பாய் சோரனுக்கு 48 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ள போதிலும், ஆட்சி அமைக்க அழைக்காமல் காலம் தாழ்த்துவது அரசியலமைப்பை அவமதிப்பதற்கு சமம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்து இருக்கிறது.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ், ஜெ.எம்.எம். கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பாய் சோரனுக்கு ஆதரவாக நிற்கும் வீடியோவை பதிவிட்டு ஆளுநரின் செயல் இந்திய ஜனநாயகத்தின் சவப்பெட்டியில் ஆணி அடிப்பது போன்று இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பதிவில், "81 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் பெரும்பான்மைக்கு 41 பேரின் ஆதரவே போதுமானது. ஆனால் 48 பேரின் ஆதரவை கொண்ட சம்பாய் சோரனை ஆட்சி அமைக்க அழைக்காமல் இருக்கும் செயல் அரசியலமைப்பை அவமதிப்பதோடு, பொது ஆணையை மறுப்பதற்கு சமம். ஆளுநர்களால் இந்திய ஜனநாயகத்தின் சவப்பெட்டியில் ஆணி அடிக்கப்படுகிறது," என்று மல்லிகார்ஜுன கார்கே குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×