என் மலர்
இந்தியா

இவருதான் அரியானா அண்ணாமலையா!.. 14 ஆண்டுகளாக செருப்பு அணியாத நபருக்கு ஷூ வாங்கி கொடுத்த மோடி
- மோடி பிரதமராகும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்று ராம்பால் காஷ்யப் என்பவர் சபதம் எடுத்தார்.
- திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்று அண்ணாமலை சபதம் எடுத்திருந்தார்.
மோடி பிரதமராக பதவியேற்கும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்று 14 ஆண்டுகளுக்கு முன்பு அரியானாவை சேர்ந்த ராம்பால் காஷ்யப் என்ற சபதம் எடுத்துள்ளார். மோடி பிரதமராக தேர்வான பிறகும் ராம்பால் காஷ்யப் செருப்பு அணியாமலேயே இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், அரியாணாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, 14 ஆண்டுகளாக செருப்பு அணியாத ராம்பால் காஷ்யப் என்ற நபருக்கு ஒரு ஜோடி செருப்புகளை பரிசளித்தார்.
இது தொடர்பான வீடியோவை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவரது பதிவில், "யமுனாநகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், கைத்தலைச் சேர்ந்த ஸ்ரீ ராம்பால் காஷ்யப் ஜியைச் சந்தித்தேன். நான் பிரதமரான பிறகுதான் செருப்பு அணிவேன் என்று அவர் 14 ஆண்டுகளுக்கு முன்பு சபதம் எடுத்திருந்தார்.
"ராம்பால் ஜி போன்றவர்களால் தான் நான் பணிவுடன் இருக்கிறேன், அவர்களின் பாசத்தையும் ஏற்றுக்கொள்கிறேன். உங்கள் அன்பை நான் மதிக்கிறேன். ஆனால் தயவுசெய்து சமூகப் பணி மற்றும் தேசக் வளர்ச்சிக்கு தொடர்புடைய ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்துங்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்று தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை சபதம் எடுத்திருந்தார். தற்போது புதிய தமிழ்நாடு பாஜக தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன் செருப்பு வாங்கி கொடுத்ததை அடுத்து அண்ணாமலை தனது சபதத்தை முடித்துக்கொண்டு செருப்பு அணிந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.






