என் மலர்
இந்தியா

எதிரே வரும் ரெயிலை நோக்கி வண்டியை ஓட்டிய நபர்.. ஊழியரின் செயலால் தடுக்கப்பட்ட தற்கொலை
- நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள நவிபேட் மண்டலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது
- ரெயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) பைக்கில் வந்த அந்த நபரை கைது செய்தனர்.
தற்கொலை செய்துகொள்ளும் நோக்கத்துடன் டிராக்கில் வந்துகொண்டிருந்த ரெயிலுக்கு எதிராக இரு சக்கர வாகனத்தை ஒட்டி வந்த நபரின் உயிர் ரெயில்வே ஊழியரின் சமயோஜிதமான செயலால் காப்பாற்றப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள நவிபேட் மண்டலத்தில் நேற்று [வியாழக்கிழமை] 30 வயதுடைய நபர் ஒருவர் தண்டவாளத்தில் எதிரே வரும் பயணிகள் ரெயிலை நோக்கி பைக்கில் வந்துகொண்டிருந்தார்
இதை கவனித்த கேட்மேன், உடனடியாக ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் தெரிவித்துள்ளார், பின்னர் அவர் லோகோ பைலட்டுக்கு வாக்கி-டாக்கி மூலம் தகவல் அளித்து, ரெயிலை நிறுத்தியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) பைக்கில் வந்த அந்த நபரை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலைக்கு முயன்றது உறுதியானது. லெவல் கிராசிங் கேட் வழியாக அந்த நபர் பைக்கை ஓட்டிச் செல்லும் வீடியோவும் உள்ளூர் ஊடகங்களில் வெளியாகி உள்ளது.






