என் மலர்
இந்தியா

2 நாட்களாக 17 வயது மைனர் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: 6 பேர் கைது- லாட்ஜில் அடைத்து வைத்த ஜெயிலரிடம் விசாரணை
- தனிப்படை போலீசார் ஓட்டல் அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மைனர் பெண்ணை மீட்டனர்.
- பாதிக்கப்பட்ட மைனர் பெண்ணுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மத்தியபிரதேச மாநிலம் ஷாதோல் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது மைனர் பெண். இவருக்கும் அவருடைய தாயாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மைனர் பெண் வீட்டை விட்டு வெளியேறினார்.
மகள் காணாமல் போனது குறித்து அவருடைய பெற்றோர் அங்குள்ள போலீஸ் நிலையத்தின் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மைனர் பெண்ணை தேடி வந்தனர்.
வீட்டை விட்டு வெளியேறிய மைனர் பெண் கடந்த 29-ந்தேதி ஷாதோல் பகுதியில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த சமீர் என்பவர் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார்.
வாலிபரின் பேச்சை நம்பி மைனர் பெண் அவருடன் சென்றார். ஒதுக்கப்புறமான இடத்துக்கு அழைத்துச் சென்று அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார்.
தொடர்ந்து சமீரின் உதவியாளர் உட்பட மேலும் 2 பேர் அங்கு வைத்து மைனர் பெண்ணை வன்கொடுமை செய்தனர். அன்று இரவு முழுவதும் அவர்கள் பெண்ணை அடைத்து வைத்திருந்தனர்.
மறுநாள் 30-ந் தேதி அதிகாலை ரெயில் நிலையம் அருகே விட்டு சென்று விட்டனர்.
அங்கு தவித்துக் கொண்டிருந்த மைனர் பெண்ணை அன்மோல் என்ற மற்றொரு வாலிபர் உதவி செய்வதாக கூறி அழைத்து சென்றுள்ளார். அவரும் அவருடைய நண்பர்கள் 2 பேர் சேர்ந்து மைனர் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
அதனைத் தொடர்ந்து அந்த பெண்ணை அங்குள்ள விடுதி அருகே விட்டு விட்டு சென்று விட்டனர்.
புர்ஹார் ஜெயிலில் துணை ஜெயிலராக பணியாற்றும் விகாஸ் சிங் என்பவர் அந்த வழியாக வந்தார். அவர் மைனர் பெண்ணை காரில் அங்குள்ள ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு பெண்ணை வலுக்கட்டாயமாக அறையில் அடைத்து வைத்தார்.
இதற்கிடையே மைனர் பெண் குறித்து போலீசார் துப்பு துலுக்கினர். அவர் லாட்ஜில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் ஓட்டல் அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மைனர் பெண்ணை மீட்டனர்.
மேலும் அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 2 நாட்களாக வன்கொடுமை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் மைனர் பெண்ணை லாட்ஜில் அடைத்து வைத்த ஜெயிலர் விகாஷ் சிங் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்தனர்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட மைனர் பெண்ணுக்கு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.