என் மலர்
இந்தியா

ஜூன் 26-ம் தேதி சபாநாயகர் தேர்தல்: மக்களவை செயலகம் அறிவிப்பு
- மக்களவை சபாநாயகர் தேர்தல் ஜூன் 26-ம் தேதி நடைபெறுகிறது.
- சபாநாயகர் பதவிக்கு ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள் குறி வைத்துள்ளன.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்ட தொடர் வரும் 24-ம் தேதி தொடங்கி ஜூலை 3-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மக்களவை சபாநாயகர் தேர்தல் ஜூன் 26-ம் தேதி நடைபெறும் என மக்களவை செயலகம் இன்று அறிவிப்பு வெளியிட்டது. மிக முக்கியத்துவம் வாய்ந்த சபாநாயகர் பதவிக்கு ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள் குறிவைத்துள்ளன.
ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய
கூட்டணி கட்சிகள் சபாநாயகர் பதவியை எதிர்பார்க்கின்றன.
சபாநாயகர் பதவிக்கான போட்டியில் வேட்பாளரை நிறுத்த பா.ஜ.க.வும் முடிவு செய்துள்ளது.
பிரதான எதிர்க்கட்சிகளான இந்தியா கூட்டணி பொது வேட்பாளரை நிறுத்த தீவிரம் காட்டி வருகிறது.
Next Story






