என் மலர்
இந்தியா

இந்தாம்மா ஏய்.. பள்ளி பிரின்சிபலுடன் குடுமிப்பிடி சண்டை போட்ட நூலகர் - வீடியோ வைரல்
- பிரின்சிபல் அவரின் தொலைபேசியை பிடுங்கி தரையில் வீசி உடைத்தார்.
- சுற்றியிருந்த மற்றவர்கள் தங்கள் மொபைல் போன்களில் சண்டையை படம் பிடித்துக் கொண்டு நின்றனர்.
மத்தியப் பிரதேசத்தில் பள்ளி பிரின்சிபலும் நூலகரும் ஒருவருக்கொருவர் தலைமுடியைப் பிடித்துக் கொண்டு சண்டையிடும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பள்ளி முதல்வருக்கும் அதே பள்ளியில் பணிபுரியும் நூலகருக்கும் இடையே ஏதோ ஒரு பிரச்சினை தொடர்பாக கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்தச் சூழலில், நூலகர் தனது மொபைல் போனில் வாக்குவாதத்தைப் படம்பிடிக்கத் தொடங்கினார். இதைக் கவனித்த முதல்வர் கோபமடைந்தார். பிரின்சிபல் அவரின் தொலைபேசியை பிடுங்கி தரையில் வீசி உடைத்தார். இது நூலகரை கோபப்படுத்தியது. அவரும் தலைமை ஆசிரியரைத் தாக்கினார். இருவரும் ஒருவரையொருவர் தலைமுடியைப் பிடித்துக் கொண்டு கடுமையாகத் தாக்கிக் கொண்டனர்.
ஒன்று சிலர் அவர்களைத் தடுக்க முயன்ற போதிலும், சுற்றியிருந்த மற்றவர்கள் தங்கள் மொபைல் போன்களில் சண்டையை படம் பிடித்துக் கொண்டு நின்றனர். சிறிது நேரத்திற்குப் பிறகு, பள்ளியில் பணிபுரியும் மற்றொரு பெண் தலையிட்டு அவர்கள் இருவரையும் பிரித்தார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் அவர்கள் இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






