என் மலர்
இந்தியா

கர்நாடகா: RSS அணிவகுப்பில் கலந்துகொண்ட பஞ்சாயத்து வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட்
- அரசு கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்
- இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
தமிழ்நாட்டை முன்மாதிரியாக எடுத்து கொண்டு கர்நாடகாவில் உள்ள அரசு கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என முதலமைச்சர் சித்தராமையாவுக்கு அமைச்சர் பிரியங்க் கார்கே கடிதம் எழுதியிருந்தார்.
இதனையடுத்து தமிழ்நாட்டில் அரசு நிலம், கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது போல், கர்நாடகாவிலும் தடை விதிப்பது குறித்து மதிப்பாய்வு செய்ய தலைமைச் செயலருக்கு முதலமைச்சர் சித்தராமையா உத்தரவு பிறப்பித்தார்.
அவ்வ்கையில் கர்நாடக மாநிலத்தில் பொது இடங்கள், பள்ளிக்கூட வளாகங்கள் போன்றவற்றில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நடைபெற தடைவிதிக்கும் வகையில் விதி கொண்டுவர அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணியில் அந்த அமைப்பின் சீருடை அணிந்து கலந்துகொண்ட பஞ்சாயத்து வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.






