search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சந்திக்க நேரம் ஒதுக்குமாறு தலைமை தேர்தல் ஆணையருக்கு ஜெய்ராம் ரமேஷ் கடிதம்
    X

    சந்திக்க நேரம் ஒதுக்குமாறு தலைமை தேர்தல் ஆணையருக்கு ஜெய்ராம் ரமேஷ் கடிதம்

    • விவி பேட் ரசீது வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு பின் சேமிக்கப்பட வேண்டும்.
    • சேமிக்கப்பட்ட ரசீதுகள் 100 சதவீதம் எண்ணப்பட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்பட வேண்டும்.

    இந்தியா கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் கூட்டம் கடந்த டிசம்பர் மாதம் 19-ந்தேதி டெல்லியில் நடைபெற்றது. இதில் 28 கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    அந்த கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாடுகளில் ஏராளமான சந்தேகம் இருக்கிறது. இதனால் புதிய நடைமுறையை தேவை. விவி பேட் (வாக்கு அளித்ததற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரம்) ரசீது வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு பின் சேமிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    வாக்கு எந்திரம் அறிமுகப்படுத்திய காலத்தில் இருந்தே அதன் செயல்பாட்டில் சந்தேகம் இருந்து வருகிறது. வல்லுனர்கள் உள்ளிட்ட பலர் இதுகுறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர். நாங்கள் பலமுறை தேர்தல் ஆணையத்திற்கு விரிவாக குறிப்புகளை கொடுத்துள்ளோம்.

    எங்களுடைய பரிந்துரை எளிதானது. வாக்காளர்கள் வாக்கு அளிக்கும்போது விவிபாட் எந்திரத்தில் ஒரு ஸ்லிப் தோன்றி யாருக்கு வாக்களிக்கப்பட்டது என்பது காட்டுகிறது. ஆனால் அந்த ஸ்லிப் வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு, பின்னர் ஒரு பாக்சில் சேகரிக்கப்பட வேண்டும். 100 சதவீதம் இந்த ஸ்லிப்களை எண்ண வேண்டும். இது வாக்காளர்களுக்கு தேர்தல் நேர்மையாக நடத்தப்படும் என்ற நம்பிக்கை கொடுக்கும் இவ்வாறு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை. பல கேள்விகளை எழுப்பி நாங்கள் தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளோம். ஆனால் இந்தியா கூட்டணி பிரதிநிதிகளை சந்திக்க தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டுகிறது எனவும் இந்தியா கூட்டணி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் விவிபேட் தொடர்பாக தங்களை சந்திக்க இந்தியா கூட்டணி குழுவுக்கு நேரம் ஒதுக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் "இந்தியா கூட்டணியில் நாங்கள் நிறைவேற்றிய தீர்மானத்தின் நகலை தேர்தல் ஆணையத்தின் தலைவரை சந்தித்து வழங்கி, ஆலோசனை நடத்த முயற்சி செய்து வருகிறோம். ஆனால், அவ்வாறு செய்வதில் எங்களுக்கு இதுவரை வெற்றி கிடைக்கவில்லை.

    "இந்தியா கூடடணியின் 3 அல்லது 4 பேர் உங்களை சந்தித்து விவிபேட் குறித்து சில நிமிடங்கள் தகவல்களை பரிமாற்றிக் கொள்ள வாய்ப்பு வழங்கும்படி மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் விடுக்கிறேன்" என ஜெய்ராம் ரமேஷ் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    30-ந்தேதியிடப்பட்டு இந்த கடினம் எழுதப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி இது தொட்ரபானை அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×