search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இதனால் தான் அவர் பா.ஜ.க. கூட்டணில் இணைந்தார் - ஜெகன் மோகன் ரெட்டி
    X

    இதனால் தான் அவர் பா.ஜ.க. கூட்டணில் இணைந்தார் - ஜெகன் மோகன் ரெட்டி

    • டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார்.
    • நாட்டிற்கும், மாநிலத்திற்கும் வெற்றிகர சூழ்நிலையை உருவாக்கும் என்று தெரிவித்தார்.

    ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஒரே சமயத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆந்திராவில் மொத்தம் 175 சட்டமன்ற தொகுதிகளும், 25 மக்களவை தொகுதிகளும் உள்ளன.

    வரும் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனா கட்சி மற்றும் பா.ஜ.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார்.

    கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, ஆந்திர பிரதேச மாநிலம் மோசமாக அழிக்கப்பட்டு இருப்பதாகவும், பா.ஜ.க. மற்றும் தெலுங்கு தேசம் கட்சி ஒன்றிணைந்து நாட்டிற்கும், மாநிலத்திற்கும் வெற்றிகர சூழ்நிலையை உருவாக்கும் என்று தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், ஆந்திர பிரதேச மாநிலத்தின் பாப்டாலா மாவட்டத்தில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சந்திர பாபு நாயுடுவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தெலுங்கு தேசம் கட்சியின் சைக்கிள் துருப்பிடித்து விட்டதாக தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், "தெலுங்கு தேசம் கட்சியின் துருப்பிடித்த சைக்கிள் செயின் சரியாக ஓடவில்லை. இதன் காரணமாக அவர் மத்திய கட்சிகளின் ஆதரவை நாடியுள்ளார். தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டணியை எதிர்த்து போட்டியிட நாங்கள் தயாராக இருக்கிறோம். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பலவீன சமூகத்திற்கு ஆதரவாக நிற்கும்," என்று தெரிவித்தார்.

    Next Story
    ×