என் மலர்tooltip icon

    இந்தியா

    வெனிசுலா பயணத்தை தவிர்க்க வேண்டும்: இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
    X

    வெனிசுலா பயணத்தை தவிர்க்க வேண்டும்: இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

    • கராகஸ் நகரில் சுமார் 7 இடங்களில் அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.
    • இதனால் வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வந்தார்.

    வெனிசுலா தலைநகர் கராகஸ் நகரில் நேற்று சுமார் 7 இடங்களில் அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, வெனிசுலா அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டதாகவும், வெனிசுலா நாட்டை அமெரிக்கா நிர்வாகம் செய்யும் என அதிபர் டிரம்ப் அறிவித்தார். அமெரிக்காவின் இந்த அடாவடி நடவடிக்கையால் சர்வதேச அரசியலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெனிசுலாவில் சமீபத்திய அரசியல் பதட்டங்கள் மற்றும் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளால் இந்தியர்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கும்படி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

    வெனிசுலாவில் உள்ள இந்தியர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும், கராகஸில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் தொடர்பில் இருக்கவும், அவசரத் தொடர்பு எண்களைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளது.

    Next Story
    ×